என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
கிருஷ்ணகிரி 29-வது வார்டில் புதிய மின்மாற்றி அமைப்பு- கவுன்சிலருக்கு பொதுமக்கள் நன்றி
- புதிய மின் டிரான்ஸ்பார்மரை மின்சார துறையினர் மாற்றினர்.
- பொது மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதால் முதல்- அமைச்சருக்கும், நகர்மன்ற உறுப்பினருக்கும், மின்சார துறையினருக்கும் நன்றி கூறினர்.
கிருஷ்ணகிரி,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை உடனடியாக மாற்ற உத்தரவு பிறப்பித்ததன் பேரில் கிருஷ்ணகிரி நகராட்சி 29-வது வார்டுக்குட்பட்ட கிருஷ்ணன் கோவில் தெருவில் நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் இருந்த மின் டிரான்ஸ்பார்மரை மாற்ற நகர் மன்ற உறுப்பினர் யாஸ்மின் அஸ்லம் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து மின்சாரவாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலினா சகாய மேரி உத்தரவின் பேரில் புதிய மின் டிரான்ஸ்பார்மரை மின்சார துறையினர் மாற்றினர்.
இந்த நிகழ்ச்சியின் போது மின்சார பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் கந்தசாமி, உதவி பொறியாளர் ரீனா மற்றும் மின் ஊழியர்கள் உடன் இருந்தனர்.
இந்த பகுதி பொது மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதால் முதல்- அமைச்சருக்கும், நகர்மன்ற உறுப்பினருக்கும், மின்சார துறையினருக்கும் நன்றி கூறினர்.






