என் மலர்
நீங்கள் தேடியது "மகா சண்டி யாகம்"
- 27-வது ஆண்டு மகாநவ சண்டியாகம், நேற்று தொடங்கியது.
- கலச ஸ்தாபனம்,கலச பூஜை மற்றும், மகா தீபாராதனை நடைபெற்றது.
ஓசூர்,
ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில்,,உலக நலனுக்காக 27-வது ஆண்டு மகாநவ சண்டியாகம், நேற்று தொடங்கியது.
3 நாள் நிகழ்ச்சியான இதில், முதல்நாள் நிகழ்ச்சி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பூர்ணாஹுதி,நீர்க்குடம் புறப்படுதல்,வாஸ்துசாந்தி,அங்குரார்ப்பணம்,வாஸ்து ஹோமம், கலச ஸ்தாபனம்,கலச பூஜை மற்றும், மகா தீபாராதனை நடைபெற்றது.
இன்று (சனிக்கிழமை), காலை கலச பூஜை,ருத்ர ஹோமம், முதற்கால மகாநவ சண்டியாகத்தை தொடர்ந்துமகா பூர்ணாஹூதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






