என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் ஊராட்சியில்  மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    மத்தூர் ஊராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தொடக்கி வைத்த போது எடுத்தபடம்.

    மத்தூர் ஊராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

    • மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும் பொது மக்களிடையே நடன நிகழ்ச்சியுடன் செயல் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • தபால் நிலையம், காவல் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மத்தூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தன.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் மழை நீர் சேகரிப்பு பேரணி கண்ணன்டஹள்ளி பரணி இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி. பள்ளியில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இப்பேரணியை ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமை வகித்து தொடக்கிவைத்தார். பேரணியில் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே நடன நிகழ்ச்சியுடன் செயல் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இவ்விழிப்புணர்வு பேரணி மத்தூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி கிருஷ்ணகிரி பிரதான சாலை வழியாக சென்று தபால் நிலையம், காவல் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மத்தூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தன.

    பேரணியில் மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, (வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், கிராம ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், பரணிப் பள்ளியின் தாளாளர் சேகர், மாவட்ட குழு உறுப்பினர் சங்கர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பியாரேஜான், மத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரவி, கண்ணன்டஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, ஒட்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ்குமார், அரிமா சங்கர் தலைவர் கவுதமன், கண்ணன்டஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் புகழேந்தி, அரிமா தனசேகரன், சரவணா ஸ்டோர் உரிமையாளர் அரிமா சரவணன், ஊராட்சி செயலர் வெங்கடேசன், மக்கள் நலப்பணியாளர் ராஜா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×