என் மலர்
கிருஷ்ணகிரி
- சம்பவத்தன்று பூச்சி மருந்து குடித்து சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சந்துரு பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள புட்டன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சந்துரு (வயது22).
இவர் சம்பவத்தன்று பூச்சி மருந்து குடித்து சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் ேமல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சந்துரு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயணிகளுக்கு தேசியக்கொடி வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- மாநகராட்சி ஆணை யாளர் பாலசுப்பிரமணியன் கொடி களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
ஓசூர்,
நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓசூர் மாநகராட்சி சார்பில், பஸ் நிலையத்தில் இன்று காலை பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு தேசியக்கொடி வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகாட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் கொடி களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
மேலும் இதில் மாமன்ற உறுப்பினர்கள் நாகராஜ், மாதேஸ்வரன் மற்றும் மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர் அஜிதா, மாநகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
- பொது விநியோக திட்ட சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
- இந்த முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், மற்றும் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறப்பட்டன.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட அஞ்சூர் ஊராட்சி செந்தாரப்பள்ளி தரப்பு நாயக்கனூர் கிராமத்தில் வட்ட வழங்கல் துறை சார்பில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பர்கூர் வட்ட வழங்கல் அலுவலர் அல்லா பாட்ஷா, சிறப்பு வருவாய் ஆய்வாளர் சின்னசாமி, அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், மற்றும் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறப்பட்டன.முகாமில் ஏராளமான பயனாளிகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.
- மாணவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் தேசிய கொடியேந்தி சென்றனர்.
- ஸ்கேட்டிங் மூலம் ஊர்வலமாக அணிவகுத்து சென்று பொதுமக்களை ஈர்க்க செய்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் அஜீப். ஸ்கேட்டிங் போட்டியில் 16 மெடல்ஸ் வாங்கியுள்ளான். மேலும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் ஒரு வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளான்.
இதேபோல் அகிலேஷ் குமார் 9 வயது சிறுவன் ஸ்கேட்டிங் போட்டியில் 8 பதக்கங்கள் பெற்றுள்ளார்.
இம் மாணவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் தேசிய கொடியேந்தி 75-வது சுதந்திர தினத்தை மரியாதை செலுத்தும் வகையில் போச்சம்பள்ளி பேருந்து நிலையம் முதல் கொடமாண்டப்பட்டி சாலை வரை தேசியக் கொடியேந்தி ஸ்கேட்டிங் மூலம் ஊர்வலமாக அணிவகுத்து சென்று பொதுமக்களை ஈர்க்க செய்தது.
- 2,600 மாணவ, மாணவிகளுக்கும், அவரவர் வீடுகளில் ஏற்றிட இலவசமாக தேசிய கொடியை பள்ளியின் நிறுவனர் வி.எம்.அன்பரசன் வழங்கினார்.
- அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றிட பிரதமர் மோடி கூறினார்.
குருபரப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகிறது. வருகிற 15-ந் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் படிக்க கூடிய 2,600 மாணவ, மாணவிகளுக்கும், அவரவர் வீடுகளில் ஏற்றிட இலவசமாக தேசிய கொடியை பள்ளியின் நிறுவனர் வி.எம்.அன்பரசன் வழங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில், நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றிட பிரதமர் மோடி கூறினார்.
அவர் கூறியதை போல எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் தேசிய கொடி ஏற்றிட 2,600 மாணவ, மாணவிகளுக்கும் இலவசமாக இன்றைய தினம் தேசிய கொடி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சங்கீதா அன்பரசன், சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஷர்மிளா, மெட்ரிக் பள்ளி முதல்வர் ரமணன், பள்ளி மேலாளர் பூபேஷ்குமார் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
- 15-ஆம் தேதி, திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் மதுபானக்கடைகள் மூடப்படும் என்றும்,
- இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனைக்கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் அனைத்தும் 15-ஆம் தேதி, திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் மதுபானக்கடைகள் மூடப்படும் என்றும்,
இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
- கடந்த 4-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார்.
- வீட்டிற்குள் பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.8 ஆயிரம் பணம், 2½ பவுன் தங்க நகைகள் கொள்ளை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் லட்சுமி நகர் 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் தாேமாதரன் (வயது42). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.8 ஆயிரம் பணம், 2½ பவுன் தங்க நகை உள்பட 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து விட்டு சென்றுள்ளது தெரியவந்தது.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
- இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கிருபாகரன் உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னபாரண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது18), ஒட்டத்தெரு பகுதியை சேர்ந்த விமல்ராஜ் (19). இவர்கள் இருவரும் நேற்று கரடியூர் பொன்னியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கிருபாகரன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விமல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாகலூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
- பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.டி.ஜெயராமன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு தேசியக்கொடியை வழங்கினார்.
ஓசூர்,
75-வது இந்திய சுதந்திர தினவிழா வாரம், வீடுகள் தோறும் வருகிற 17-ந்தேதி வரை "சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படவுள்ளது.
இதையொட்டி, ஊராட்சிக்குட்பட்ட அனைத்து வீடுகளிலும் ேதசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி செயல்படுத்தும் வகையில், பாகலூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.டி.ஜெயராமன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு தேசியக்கொடியை வழங்கினார். மேலும் இதில், துணைத்தலைவர் சீனிவாச ரெட்டி, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் சர்வேஷ் ரெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- கால் கொலுசை நன்றாக பாலீஷ் போட்டு கொடுத்துள்ளார்.
- அந்த நபர் நூதன முறையில் பெண்ணிடம் இருந்து தங்க செயினை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மல்லிப்பட்டியை சேர்ந்தவர் துரை. விவசாயியான இவரது மனைவி அஸ்வினி (வயது23). நேற்று மதியம் ஒரு மர்ம நபர் துரை வீட்டிற்கு வந்து செயின் பாலிஷ் போடுவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய அஸ்வினி தனது காலில் அணிந்து இருந்த கொலுசை கொடுத்துள்ளார். கால் கொலுசை நன்றாக பாலீஷ் போட்டு கொடுத்துள்ளார். பின்னர் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க நகையை கொடுத்துள்ளார். அந்த நபர் நூதன முறையில் பெண்ணிடம் இருந்து செயினை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெருபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.
- மேலும் மதுபானம், லாரியை பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் காமன்தொட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட ஆயிரத்து 849 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது.
மேலும் மதுபானம், லாரியை பறிமுதல் செய்யப்பட்டது.
குட்கா கடத்திய பெங்களூரை சேர்ந்த சிவன்னசெட்டி (வயது38), பிரதீபா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






