என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாயக்கனூர் கிராமத்தில்   பொது விநியோக திட்ட   சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம்
    X

    நாயக்கனூர் கிராமத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம்

    • பொது விநியோக திட்ட சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
    • இந்த முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், மற்றும் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறப்பட்டன.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட அஞ்சூர் ஊராட்சி செந்தாரப்பள்ளி தரப்பு நாயக்கனூர் கிராமத்தில் வட்ட வழங்கல் துறை சார்பில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் பர்கூர் வட்ட வழங்கல் அலுவலர் அல்லா பாட்ஷா, சிறப்பு வருவாய் ஆய்வாளர் சின்னசாமி, அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், மற்றும் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறப்பட்டன.முகாமில் ஏராளமான பயனாளிகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.

    Next Story
    ×