என் மலர்
கிருஷ்ணகிரி
- அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.
- ஓம் சக்தி தேரை, பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையில் உள்ள ஓம் சக்தி கோவிலில் 30-ஆம் ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.
மேலும், பெண் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக கைகளில் தீச்சட்டி ஏந்தியும், கஞ்சி கலசங்களை எடுத்துக்கொண்டும் ஊர்வலமாக சென்றனர். பின்னர், ஓம் சக்தி தேரை, பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.
தேர் பேட்டையில் நான்கு வீதிகளின் வழியாக சென்ற தீச்சட்டி ஊர்வலம், ஓம் சக்தி கோவிலில் நிறைவடைந்தது.இதில் ஓசூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்
- வீட்டின் கதவை உடைக்க முற்பட்டபோது பயனளிக்கவில்லை.
- தீயணைப்பு துறையினர் மற்றொரு கம்பியை உடைத்து அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவனை உள்ளே இறக்கினர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் விளையாட்டு மைதானத்தின் எதிரே உள்ள கவர்னர் தோப்பு பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 2 வயதில் ரமேஷ் என்ற குழந்தை உள்ளது.
நேற்று அந்த குழந்தை வீட்டின் உட்பகுதியில் விளையாடி கொண்டிருந்த போது தாளிட்டு சிக்கிக் கொண்டான். இதனால் அந்த சிறுவன் அலறினான்.
இது குறித்து ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டின் கதவை உடைக்க முற்பட்டபோது பயனளிக்கவில்லை.குழந்தை அலறல் சத்தம் அதிகமாகவும் இருந்ததால் ஜன்னல் கம்பியை உடைத்து தீயணைப்பு, காவல்துறையினர் இறங்கும் பொழுது போதுமான இடைவெளி ஏற்படவில்லை. தீயணைப்பு துறையினர் மற்றொரு கம்பியை உடைத்து அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவனை உள்ளே இறக்கினர்.
அந்த சிறுவனை ஜன்னல் கம்பி வழியாக உள்ளே சென்று கதவின் உட்பக்கத்தாைள திறந்தான். இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்த தீயணைப்பு துறையினருக்கு, காவல்துறையினருக்கும் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்தனர்.
- பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களாக பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தியிடம் வழங்கினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி, மத்தூர்பதி ஸ்ரீ காளியம்மன் கோவில் வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமையில் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலைஞர் வீடு வழங்குதல், ஜெல்ஜீவன்குடிநீர் அமைத்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் குடிநீர், கழிவு நீர் கால்வாய் அமைத்தல், சாலை அமைத்தல், தெருவிளக்கு, முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களாக பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தியிடம் வழங்கினர்.
இக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பர்வின்தாஜ் சலீம், மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தகுமாரி, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரவி, வார்டு உறுப்பினர்கள், வருவாய் துறை அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியார்கள், மக்கள் நல பணியாளர் ராஜா, சைல்டு லைன் பணியாளர்கள், சுய உதவிக் குழு பெண்கள் ஊர் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உராட்சி செயலர் வெங்கடேசன் செய்திருந்தார்.
- கோ-பூஜை, யாக பூஜை மற்றும் 16 வகை அபிஷேகங்களுடன் மகா சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
- மாலை 5 மணிக்கு தொடங்கிய பூஜை இரவு 9 மணி வரை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி சப்ஜெயில் ரோட்டில் உள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் சங்கட சதுர்த்தி பூஜை சிறப்பாக நடைபெற்றது. விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடை பெற்றது.
வினாயக பெருமானுக்கு 608 லிட்டர் பால் அபிஷேகமும் மற்றும் மஞ்சள் குங்குமம், சந்தனம், விபூதி மற்றும் திரவ பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதே போல் தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே மகா சங்கடஹர சதுர்த்தி தினத்தையொட்டி ராமகொண்ட அள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி அக்குமாரியம்மன் ஆலயத்தில், சிறப்பு பூஜைகள் நடந்தது. அந்த ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கடஹர கணபதிக்கு, கோ-பூஜை, யாக பூஜை மற்றும் 16 வகை அபிஷேகங்களுடன் மகா சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு தொடங்கிய பூஜை இரவு 9 மணி வரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
இந்த பூஜையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி மாதையன் சுவாமிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
இதே போல் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோவில்களில் சங்கட சதுர்த்தி பூஜைகள் நடந்தது.
- குடிநீர், கழிவு நீர் கால்வாய் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தியிடம் வழங்கினர்.
- தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்தூர், ஆக.16-
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சி கொத்தக்கோட்டை ஸ்ரீ பெருமாளப்பன் கோவில் வளாகத்தில் சுதந்திர தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர், கழிவு நீர் கால்வாய் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தியிடம் வழங்கினர்.
இதனை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு உயர்நிலைப் பள்ளி, மலையாண்டஹள்ளி அரசு நடுநிலைப் பள்ளி, பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட நீர் தேக்க குட்டை ஆகிய இடங்களில் தேசிய கொடியேற்றி வைத்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி மரியாதை செலுத்தினார்.
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி புகழேந்தி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மகேஸ்வரி மாதப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர் தங்கராஜ், மக்கள் நலப்பணியாளர் அண்ணாதுரை, நியாவிலைக் கடை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்கள், தொண்டு நிறுவன பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் சரவணன் செய்திருந்தார்.
- காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
- அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி,
நாட்டின் 75-வது சுதந்திர விழா இன்று கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா இன்று காலை கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது.
இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் கலந்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில் தனி வட்டாட்சியர் சார்பில் ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 500 மதிப்பில் 12 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறை சார்பில் ரூ.17 ஆயிரத்து 640 மதிப்பில் 2 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 750 மதிப்பில் 2 பயனாளிகளுக்கும், சமூக நலத்துறை சார்பில் ரூ.6 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் 40 பயனாளிகளுக்கும், மாவட்ட மேலாளர் அலுவலகம் சார்பில் 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஒரு பயனாளிகளுக்கும் என மொத்தம் 57 பேருக்கு ரூ.18 லட்சத்து 87 ஆயிரத்து 890 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- ரூ.47.90 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது.
- அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் ஐகுந்தம், ஊத்தங்கரை ஒன்றியம் செங்கழநீர்பட்டி ஆகிய கிராமங்களில் ரூ.81 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்களின் திறப்பு விழா நடந்தது.
இதை தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஐகுந்தம் கூட் ரோடு முதல் சென்றாநாயக்கனூர் வரை ரூ.47.90 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிகளில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பங்கேற்று, கால்நடை மருந்தக கட்டிடங்களை திறந்து வைத்தும், தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கியும் வைத்தனர். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, பர்கூர் எம்எல்ஏ., மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர்.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ., செங்குட்டுவன், முன்னாள் எம்பி.க்கள் சுகவன், வெற்றிச்செல்வன், நாகோஜனஅள்ளி பேரூ ராட்சி தலைவர் தம்பிதுரை, ஊராட்சி மன்றத் தலைவர் ரஜினிசெல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கால்நடை பராமரிப்புத்துறை அதி காரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
- ஆவின் பால் ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தினால், அதில் 50 பைசா மட்டுமே உற்பத்தியாளர்களுக்கு செல்கிறது.
- ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் உயர்த்தினால் மட்டுமே ஆவின் பால் உற்பத்தியார்களையும், ஆவின் நிறுவனத்தையும் காக்க முடியும்.
கிருஷ்ணகிரி,
பால் கொள்முதல் விலையை உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில், பால் உற்பத்தியாளர்கள் தீவன விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனம் பாலுக்கான விலையை இந்த ஆண்டில் மூன்று முறை உயர்த்தி உள்ளனர்.
ஆனால் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு இதுவரை உயர்த்தவில்லை. தமிழகமெங்கும் தனியார் பால் ஒரு லிட்டர் 65 ரூபாய் வரை விற்கின்றனர். கொள்முதல் விலை ஒரு லிட்டருக்கு 45 ரூபாய் வரை உற்பத்தியாளர்களுக்கு வழங்குகின்றனர்.
ஆவின் பால் ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தினால், அதில் 50 பைசா மட்டுமே உற்பத்தியாளர்களுக்கு செல்கிறது. எனவே அரசு உடனடியாக பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் உயர்த்தினால் மட்டுமே ஆவின் பால் உற்பத்தியார்களையும், ஆவின் நிறுவனத்தையும் காக்க முடியும்.
சமீபத்தில் ஆவின் பால் பொருட்களுக்கு விலை உயர்வை அரசு அறிவித்ததை அனைவரும் வரவேற்றனர். எனவே தமிழக முதல்வர், பால் கொள்முதல் விலையை உடனே உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது.
- 35 பதக்கங்களை வென்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது.
இதில், சென்னை, திண்டுக்கல், புதுக்கோட்டை, கிருஷ்ண கிரி, கன்னியாகுமரி, சேலம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, விருதுநகர், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 620 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில், கிருஷ்ணகிரி மாவட்ட குத்துச்சண்டை சங்க செயலாளர் மற்றும் பயிற்சியாளர் முனிராசு தலைமையில், 35 வீரர்கள், 5 வீராங்கனைகள் கலந்து கொண்டு, 14 தங்கம், 11 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை வென்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், மாவட்ட குத்துச்சண்டை சங்கத் தலைவர் ஏகம்ப வாணன், துணைத் தலைவர் லட்சுமணன், பொருளாளர் தீபக் ஆகியோர் பாராட்டி னர்.
- ஸ்ரீசக்கரம், கலசாபிஷேகமும், பின்னர் நைவேத்யம், தீபாராதனை யும் நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
ஓசூர்,
ஒசூர் சந்திர சூடேஸ்வரர் கோவிலில், உலக நலனுக்காக 27-வது ஆண்டு மகாநவ சண்டியாகம், 3 நாட்கள் நடைபெற்றது.
நிறைவு நாள் நிகழ்ச்சியாக, நேற்று கலச பூஜை, ருத்ர ஹோமம்,லட்சுமி ஹோமம்,துர்கா ஹோமத்தை தொடர்ந்து, மூன்றாம் கால மகாநவ சண்டியாகம் நடந்தது.
தொடர்ந்து, மகா சங்கல்பம்,வடுக பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை ஆகிய நிகழ்ச்சிகளும் மற்றும் பூர்ணாஹுதி, நவசண்டி யாக விளக்கவுரையும் நடைபெற்றது.
பின்னர், மகாதீபாராதனை, கலசம் புறப்படுதல் கணபதி, சிவன், அம்பாள், ஸ்ரீசக்கரம், கலசாபிஷேகமும், பின்னர் நைவேத்யம், தீபாராதனை யும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். விழா நடைபெற்ற 3 நாட்களும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- தனியார் குடியிருப்பு சங்கம் சார்பில் நேற்று ரத்ததான முகாம் நடைபெற்றது.
- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் ஒசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பூனப்பள்ளியில், ஓசூர் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் குடியிருப்பு சங்கம் சார்பில் நேற்று ரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில்,போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் ஒசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
மேலும் இதில், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகன், செங்குட்டுவன், துணை மேயர் ஆனந்தய்யா, ஒசூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






