என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே உள்ள களர்பதி ஊராட்சி கொத்தக் கோட்டை, பெருமாளப்பன் கோவில் வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
களர்பதி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
- குடிநீர், கழிவு நீர் கால்வாய் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தியிடம் வழங்கினர்.
- தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்தூர், ஆக.16-
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சி கொத்தக்கோட்டை ஸ்ரீ பெருமாளப்பன் கோவில் வளாகத்தில் சுதந்திர தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர், கழிவு நீர் கால்வாய் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தியிடம் வழங்கினர்.
இதனை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு உயர்நிலைப் பள்ளி, மலையாண்டஹள்ளி அரசு நடுநிலைப் பள்ளி, பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட நீர் தேக்க குட்டை ஆகிய இடங்களில் தேசிய கொடியேற்றி வைத்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி மரியாதை செலுத்தினார்.
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி புகழேந்தி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மகேஸ்வரி மாதப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர் தங்கராஜ், மக்கள் நலப்பணியாளர் அண்ணாதுரை, நியாவிலைக் கடை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்கள், தொண்டு நிறுவன பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் சரவணன் செய்திருந்தார்.






