என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரையில் பூட்டிய வீட்டுக்குள் சிக்கிய 2 வயது குழந்தை மீட்பு
- வீட்டின் கதவை உடைக்க முற்பட்டபோது பயனளிக்கவில்லை.
- தீயணைப்பு துறையினர் மற்றொரு கம்பியை உடைத்து அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவனை உள்ளே இறக்கினர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் விளையாட்டு மைதானத்தின் எதிரே உள்ள கவர்னர் தோப்பு பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 2 வயதில் ரமேஷ் என்ற குழந்தை உள்ளது.
நேற்று அந்த குழந்தை வீட்டின் உட்பகுதியில் விளையாடி கொண்டிருந்த போது தாளிட்டு சிக்கிக் கொண்டான். இதனால் அந்த சிறுவன் அலறினான்.
இது குறித்து ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டின் கதவை உடைக்க முற்பட்டபோது பயனளிக்கவில்லை.குழந்தை அலறல் சத்தம் அதிகமாகவும் இருந்ததால் ஜன்னல் கம்பியை உடைத்து தீயணைப்பு, காவல்துறையினர் இறங்கும் பொழுது போதுமான இடைவெளி ஏற்படவில்லை. தீயணைப்பு துறையினர் மற்றொரு கம்பியை உடைத்து அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவனை உள்ளே இறக்கினர்.
அந்த சிறுவனை ஜன்னல் கம்பி வழியாக உள்ளே சென்று கதவின் உட்பக்கத்தாைள திறந்தான். இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்த தீயணைப்பு துறையினருக்கு, காவல்துறையினருக்கும் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்தனர்.






