என் மலர்
கிருஷ்ணகிரி
- போட்டிகளை, ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் தொடங்கி வைத்தார்.
- வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம் மற்றும் பரிசு களை வழங்கினர். மேலும் மாணவர்கள் அனை வருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
ஓசூர்
ஓசூர் வடக்கு சரக அளவிலான, 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான கைப்பந்து போட்டிகள், ஓசூர் - பாகலூர் சாலையில் உள்ள யோகி வேமனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், வடக்கு சரகத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
போட்டிகளை, ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆய்வாளர் பிரபாவதி மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி ஆகியோர் மாணவ, மாணவியரை வாழ்த்தினர்.
போட்டிகளை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, பள்ளியின் தலைவர் ஜி.எம்.ரெட்டி, செயலாளர் கிருஷ்ணாரெட்டி, அரிமா சங்க மூத்த தலைவர் ஒய்.வி.எஸ்.ரெட்டி, பொருளாளர் கிருஷ்ணாரெட்டி, ரவிவர்மா, பள்ளி முதல்வர் கவிதா ஆகியோர் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம் மற்றும் பரிசு களை வழங்கினர். மேலும் மாணவர்கள் அனை வருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மேலும் போட்டிக்கான ஏற்பாடுகளை, பள்ளி மேலாளர் மஞ்சுநாத், புக்கசாகரம் உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ்குமார், மாது, கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில், உங்கட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.
- தமிழக முதல்-அமைச்சர், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒலிம்பிக் தங்க வேட்டை என்ற திட்டத்தை அறிவித்து, அதற்கு முதல்கட்டமாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
- செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கும் வண்ணம் தமிழக முதல்-அமைச்சர் நடத்தி முடித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் நடந்து வரும் 35-வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியினை தொடக்கி வைத்த தமிழக சுற்றுச்சூழல்- கால நிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்ட தடகள சங்கமும், தமிழக தடகள சங்கமும் இணைந்து, மாநில அளவிலான தடகளப் போட்டிகளை நடத்தி வருகிறது. நான்கு நாட்கள் நடக்கும் இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களை கண்டறிந்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களில் திறமையானவர்களை கண்டறிந்து எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிக்கு பயிற்சி கொடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு ஒரு சிந்தட்டிக் டிராக், உயர்மின் கோபுர விளக்கு, ஜூடோ அரங்கம், நடைபாதையில் மின்விளக்கு ஆகியவற்றை கேட்டுள்ளனர். இந்த கோரிக்கைகள் அனைத்தையும், தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதே போல் ஓசூர் மாநகராட்சி விளையாட்டு அரங்கில், ஒரு சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதுவும் பரீசிலிக்கப்படும். கிரா மப்புற இளைஞர்களை கண்டறிந்து, குறிப்பாக 9 லிருந்து 12 வயதுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தமிழகம் முழுவதும் கண்ட றிவதற்கான பணிகளை துவங்க இருக்கிறோம்.
இங்கு நான்கு நாட்கள் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழக முதல்-அமைச்சர், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒலிம்பிக் தங்க வேட்டை என்ற திட்டத்தை அறிவித்து, அதற்கு முதல்கட்டமாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
கடந்த 2006 முதல் 2011 வரை அன்றைக்கு துணை முதல்வராக இருந்த காலத்தில், தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகளிலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இடை யில் அதை பராமரிக்க முடியாத சூழலில், மீண்டும் அதை பராமரிக்கின்ற நடவடிக்கைகள் தமிழக முதல்-அமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.
விளையாட்டு பயிற்சி யாளர்கள் குறைவாக உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் 86 பேர் என்.ஏ.எஸ் முடித்துள்ளனர். புதிதாக முடித்தவர்களையும் பரிசீலிக்கப்பட்டு விரைவில் போதிய பயிற்சியாளர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கும் வண்ணம் தமிழக முதல்-அமைச்சர் நடத்தி முடித்துள்ளார்.
அதன் அடிப்படையில், வருகிற செப்டம்பர் மாதம் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை உலக மகளிர் டென்னிஸ் போட்டியானது சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கு அடுத்து சர்வதேச தரத்திலான போட்டிகள் சூழ்நிலைக்கு ஏற்ப நடத்துவற்கு தமிழக முதல்வர் தயார் நிலையில் ஏற்பாடுகளை செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் இயங்கும் கிரானைட் குவாரிகளை கண்டறிய 25 பேர் கொண்ட குழு நேரடியாக ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுவது மிகவும் குறைந்துள்ளது. தற்போது நவீன தொழில் நுட்பம் பயன்படுத்துவதால், அந்த மாதிரியான பழக்க வழக்கம் குறைந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
- எனது மகளை ஓசூரை சேர்ந்த சதீஸ்குமார் என்பவர் கடத்தி சென்றிருக்க லாம் என்று மாாணவியின்தந்தை புகார் கூறியிருந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தின்னூர் பகுதிைய சேர்ந்தவர் பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவி. இவர் கடந்த 15-ந்தேதி வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் எனது மகளை ஓசூரை சேர்ந்த சதீஸ்குமார் என்பவர் கடத்தி சென்றிருக்க லாம் என்று புகார் கூறியி ருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவர்களை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
- அவர்களை கேரளா மாநிலம், கோழிக்காடு பகுதியை சேர்ந்த முகமது ரபிக் (31) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கூறியிருந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள பாயப்பாதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜான்கிங்ஸ்லி (வயது36). இவரது மனைவி எலிசபெத் (30). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அன்று எலிசபெத் தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர்கள் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து ஜான்கிங்ஸ்லி ஓசூர் அட்கோ போலீசில் எனது மனைவி, மகன் ஆகியோைர கேரளா மாநிலம், கோழிக்காடு பகுதியை சேர்ந்த முகமது ரபிக் (31) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவருக்கும், குப்புசாமி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
- நேற்று ருக்குமணியின் 2 பசுமாடுகள் கொட்டகையில் இறந்து கிடந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள பண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் ருக்குமணி. இவர் பசுமாடுகள் வளர்த்து வந்தார். இவருக்கும், குப்புசாமி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
நேற்று ருக்குமணியின் 2 பசுமாடுகள் கொட்டகையில் இறந்து கிடந்தது.
இது குறித்து அவர் சிங்காரபேட்டை போலீசில் குப்புசாமி என்பவர் தீவனத்தில் யூரியாவை கலந்து கொடுத்ததால் எனது பசுமாடுகள் இறந்துள்ளது என்று கூறியிருந்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து குப்புசாமியை தேடி வருகின்றனர்.
- போலீசார் பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- லாட்டரி சீட்டுகள் விற்ற கார்த்திக்கேயன், காமராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிராஜீலு மற்றும் போலீசார் பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற கார்த்திக்கேயன் (வயது34), காமராஜ் (42) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- கடந்த ஆட்சியில் ரூ.2 கோடிக்கு மேல் பணம் ஒதுக்கீடு செய்து அரசு சார்பில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்றது.
- பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சியை சேர்ந்த போகிபுரம் கிராமத்தில் 100 மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 1000 மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் 100-க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள், பள்ளி, கல்லூரி சென்று படித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் இருந்து சின்னகாம நாயக்கன்பேட்டை, பெரியகாம நாயக்கன் பேட்டை இடையிலான சின்னார் கால்வாயில் செல்லும் தண்ணீர் வழியாக தான் கிராம மக்கள் பரிசல் முலம் பயணம் செய்து சூளகிரி செல்ல முடியும். இதனால் பள்ளி, கல்லூரி, ெதாழில்சாலைகளுக்கு செல்பவர்கள் 60, 70 ஆண்டுகளாக அவதிபட்டு வருகின்றனர்.
கடந்த ஆட்சியில் ரூ.2 கோடிக்கு மேல் பணம் ஒதுக்கீடு செய்து அரசு சார்பில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்றது.
பின்பு தண்ணீர் வரத்து அதிகரிப்பால் பாலம் கட்டப்பட்டு பாதியில் பணியை நிறுத்தினர். இதனையடுத்து பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.
இதனால் இந்த கிராமத்தில் இருந்து வெளியூர் சென்று படிக்கும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் ஆபத்தான நிலையில் பரிசலில் பயணம் செய்தும், ஒரு சிலர் கிராமத்திற்கு செல்ல காட்டு வழியை பயன்படுத்தி 5 கிலோ மீட்டர் சுற்றி சென்றும் வருகின்றனர்.
- போட்டியின் முதல் நாளான நேற்று கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல், சங்கிலி குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
- இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில், 35-வது மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில், 14, 16, 18 மற்றும் 20 வயது ஆகிய நான்கு பிரிவுகளில் 4 நாட்கள் போட்டிகள் நடக்கிறது.
100 மீட்டர் முதல் 10 ஆயிரம் மீட்டர் வரை ஓட்டப் போட்டிகள், தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முனை தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நடை ஓட்டம் ஆகிய போட்டிகள் நடந்தது.
போட்டியின் முதல் நாளான நேற்று கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல், சங்கிலி குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது.
இதில், ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் கவுசிக்தேவ் மதியழகன் வரவேற்று பேசுகிறார். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தேசியக் கொடியை ஏற்றுகிறார். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா, ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் தேவாரம், மாவட்டத் தலைவர் மதியழகன், உதவி கலெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
- மாணவன் நேற்று குண்டூசியை முழுங்கி தண்ணீர் குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
- ஸ்கேன் செய்தபோது, வயிற்றில் குண்டூசி இருந்தது தெரியவந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள மோரனபள்ளி பகுதியை சேர்ந்த மாணவன் எல்லேஷ். இவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில், மாணவன் நேற்று குண்டூசியை முழுங்கி தண்ணீர் குடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் செய்தபோது, வயிற்றில் குண்டூசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, எல்லேசை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- புதிய மின் இணைப்புகள் வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
- தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.803 கோடி செலவில் 2.13 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தினை உள்ளடக்கி ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் ஓராண்டில் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஓசூர் ஆலூர் மற்றும் குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் ரூ.9.75 கோடி மதிப்பில் திறன் உயர்த்தும் பணிகளை தொடங்கி வைத்தார்.
அதையொட்டி கிருஷ்ணகிரி தாலுகா குருபரபள்ளி துணை மின்நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, கணினி வாயிலாக திறன் உயர்த்தும் இயக்கத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக துணை
மின் நிலையங்கள் தரம் உயர்த்தும் பணிகள் மற்றும் புதிய மின் இணைப்புகள் வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் தற்போது முதல் -அமைச்சர் தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மின் தொடரமைப்புக் கழகம் சார்பாக, ஓசூர் தாலுகா ஆலூர் துணை மின் நிலையத்தில் ரூ.5.21 கோடி மதிப்பிலும், ஓசூர் துணை மின் நிலையம் 16 மெகாவாட்லிருந்து 25 மெகாவாட் வரை திறன் உயர்த்தல் பணி ரூ.2.13 கோடி மதிப்பிலும், குருபரப்பள்ளி துணை மின் நிலையத்தில் 16 மெகாவாட்லிருந்து 25 மெகாவாட் வரை திறன் உயர்த்துதல் ரூ.2.41 கோடி மதிப்பில் என மொத்தம் ரூ.9.75 கோடி மதிப்பில் திறன் உயர்த்தும் பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.
இதன் மூலம் விவசாய மற்றும் தொழில் நிறுவனங்க ளுக்கு மின்சாரம் சரியான முறையில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஓசூர் தாலுகா ஆலூர் துணை மின்நிலையத்தின் மூலம் சுற்றியுள்ள கிராமங்களான புக்கசாகரம், ராமசந்திரபுரம் ஆகிய பகுதிகளும், குருபரப்பள்ளியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ள அனைத்து பகுதிகளுக்கும், கூடுதலாக மின்பரிமாற்றம் கிடைக்கும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.803 கோடி செலவில் 2.13 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தினை உள்ளடக்கி ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் ஓராண்டில் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்- அமைச்சரின் சிறப்பு திட்டமான 1 லட்சம் மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8,386 பயனாளிகளுக்கு (8 சதவிகிதம்) இலவச மின் வசதி வழங்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் மையப்படுத்தப்பட்ட மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்ட 20.06.2021 முதல் 18.07.2022 வரை 9 லட்சத்து 82 ஆயிரம் அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு அதில் 9 லட்சத்து 72 ஆயிரத்து 180 அழைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் முத்துசாமி, வேலு, கவிதா, ஒன்றியக்குழுத் தலைவர் சரோஜினி பரசுராமன், ஒன்றியக்குழு உறுப்பினர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை செந்தில்குமார் மற்றும் மின் வாரிய பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
- மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களும் ஒரே சீரான வளர்ச்சியை பெறவேண்டும் என்ற நோக்கத்தில், பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
- சுதந்திர போராட்ட தியாகியின் இல்லத்திற்கு கலெக்டர் நேரடியாக சென்று அவரது வாரிசுதாரருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட, பர்கூர் ஊராட்சி ஒன்றியம் காட்டாகரம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளை பாறையூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கிராம நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் முதியோர் உதவி தொகை, பட்டா, குளம் தூர்வாருதல் உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கைகளை கலெக்டரி டம் கூறினார்கள்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களும் ஒரே சீரான வளர்ச்சியை பெறவேண்டும் என்ற நோக்கத்தில், பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மாவட்ட நிர்வாகம் குடிநீர், மின்சார வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி, நீர்பாசன திட்டங்கள், தனி நபர் வீடு கட்டும் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தகுதியான நபர்களுக்கு அரசின் பலன்கள் நேரடியாக சென்று சேருவதற்கு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த கிராம சபை கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்கவும், வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து காவே ரிப்பட்டணம் பேரூராட்சி அம்பேத்கார் நகரை சேர்ந்த மறைந்த ராஜப்பன் என்ற சுதந்திர போராட்ட தியாகியின் இல்லத்திற்கு கலெக்டர் நேரடியாக சென்று அவரது வாரிசுதாரருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
இதே போல மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் இல்லங்களுக்கு வருவாய் துறை அலுவலர்கள் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.
இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சந்தானம், தாசில்தார் பிரதாப், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, வெங்கடராமகணேஷ், ஊராட்சி மன்றத் தவைர் ரங்கநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பழனி, ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ், துணைத் தலைவர் கவுசல்யா, ஊராட்சி செயலர் கஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் லதா மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதார துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
- மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ்சேவை புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
- நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெரிகேப்பள்ளி கிராமத்தில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடந்தது.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மக்களை தேடி மருத்துவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ்சேவை புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், தோட்டக்கலைத்துறை சார்பாக முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைக்க காய்கறி விதைகள் வழங்குதல் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மதின் இணைப்பு வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில்சார் கடனுதவிகள் வழங்குதல், மீண்டும் மஞ்சள் பை, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தாது உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை திறப்பு, இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
இதே போல், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், பிற துறை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த புகைப்பட கண்காட்சியினை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பார்வையிட்டனர்.






