என் மலர்
நீங்கள் தேடியது "ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி"
- போட்டியின் முதல் நாளான நேற்று கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல், சங்கிலி குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
- இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில், 35-வது மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில், 14, 16, 18 மற்றும் 20 வயது ஆகிய நான்கு பிரிவுகளில் 4 நாட்கள் போட்டிகள் நடக்கிறது.
100 மீட்டர் முதல் 10 ஆயிரம் மீட்டர் வரை ஓட்டப் போட்டிகள், தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முனை தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நடை ஓட்டம் ஆகிய போட்டிகள் நடந்தது.
போட்டியின் முதல் நாளான நேற்று கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல், சங்கிலி குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது.
இதில், ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் கவுசிக்தேவ் மதியழகன் வரவேற்று பேசுகிறார். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தேசியக் கொடியை ஏற்றுகிறார். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா, ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் தேவாரம், மாவட்டத் தலைவர் மதியழகன், உதவி கலெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.






