என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிருஷ்ணகிரி நகர், தொழிற்பேட்டை, பவர் ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி 1 மற்றும் பகுதி 2, பழையபேட்டை, காட்டிநாய னப்பள்ளி, அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, கே.ஆர்.பி.டேம், சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், கூலியம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அந்த வழியாக வந்த கார் ஒன்று, இருசக்கர வாகனம் பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது.
    • பாஸ்கரின் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஓசூர்

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரபள்ளி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது40). கட்டிட காண்டிராக்டர் ஆவார்.

    இவர், நேற்று இருசக்கர வாகனத்தில் ஓசூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஆர்.டி.ஓ.செக்போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று, இருசக்கர வாகனம் பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில், பாஸ்கரின் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இரவு 11 மணி அளவில் சாலையில் நடந்து சென்ற முருகேசனை பிரபு வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கினார்.
    • முருகேசனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார்.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா கந்திகுப்பம் அருகே உள்ள பாலேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது ராம்நகர். இந்த ஊரை சேர்ந்தவர் குப்புசாமி. தூய்மை பணியாளர். இவரது மகன் முருகேசன் (வயது 17). கூலித்தொழிலாளி. இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் பிரபு (27). இவர்கள் 2 பேரின் குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ராம்நகரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அந்த நேரம் 2 குடும்பத்தினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இரவு 11 மணி அளவில் சாலையில் நடந்து சென்ற முருகேசனை பிரபு வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் கீழே விழுந்த முருகேசனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார்.

    இந்த கொலை தொடர்பாக பர்கூர் இன்ஸ்பெக்டர் சவிதா வழக்குபதிவு செய்து பிரபு, அவரது அண்ணன் திருப்பதி, தாய் பொட்டு அம்மாள் ஆகியோரை கைது செய்தார். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • ரக்‌ஷாபந்தன் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற இவர்கள், மீண்டும் ஓசூர் திரும்பும் போது, ரெயிலில் கஞ்சா கொண்டு வந்துள்ளனர்.
    • அறையை சோதனையிட்டு அங்கு பதுக்கி வைத்திருந்த நான்கரை கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

    ஓசூர்

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சந்தன்குமார் (வயது22), மற்றும் சத்ருகன்குமார்(25). நண்பர்களான இவர்கள், ஓசூர் அருகே ஆலூர் கிராமத்தில், உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகி றார்கள். மேலும் அந்த பகுதியிலேயே வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர்.

    இந்த நிலையில், ரக்‌ஷாபந்தன் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற இவர்கள், மீண்டும் ஓசூர் திரும்பும் போது, ரெயிலில் கஞ்சா கொண்டு வந்துள்ளனர். இதனை, உடன் பணிபுரியும் நண்பகளுக்கு வழங்க எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார், நேற்று மாலை ஆலூர் சென்று, அறையை சோதனையிட்டு அங்கு பதுக்கி வைத்திருந்த நான்கரை கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.30,000 ஆகும். மேலும், சந்தன்குமார், சத்ருகன்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    • இதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆக்கியுள்ளார்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவனை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பிரட்லி, இவர் ஆசை வார்த்தை கூறி அதே பகுதியை 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார்.

    இது குறித்து ஊத்தங்கரை மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயுடன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கர்ப்பம் ஆக்கி தலைமறைவாக உள்ள பிரட்லியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • இளைஞர்கள் மூன்று பேரும் பெருமாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • வாக்குவாதம் முற்றியத்தில் பெருமாளை கல்லால் தாக்கி உள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே மூக்காகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது62). நேற்று இவரது வீட்டின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த சவுந்தர பாண்டியன், சக்திவேல், விக்னேஷ், ஆகிய மூன்று வாலிபர்கள் நள்ளிரவு செல்போனில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதை பார்த்துக் கொண்டிருந்த பெருமாள் இரவு நேரத்தில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். இதனால் இளைஞர்கள் மூன்று பேரும் பெருமாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியத்தில் பெருமாளை கல்லால் தாக்கி உள்ளனர்.

    இதில் படுகாயம் அடைந்த பெருமாள் மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து மத்தூர் போலீசில் பெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் சவுந்தரபாண்டி யனை கைது செய்து கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள இரு வரையும் தேடி வருகின்றனர்.

    • விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
    • இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா, ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் எம்.எம்.ஏ., செங்குட்டுவன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில், "தேவராஜ்" 35-வது மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது.

    ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முனை தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நடை ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த விளையாட்டுப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு தடகள சங்கத்தின் மாநில தலைவர் தேவாரம் தலைமை தாங்கினார்.

    தடகள சங்கத்தின் மாவட்டத் தலைவரும், மாநில துணைத் தலைவரும், பர்கூர் எம்எல்ஏ.,வுமான மதியழகன் வரவேற்பு ரையாற்றினார். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தேசியக் கொடியை ஏற்றினார்.

    தொடர்ந்து விளை யாட்டுப் போட்டிக்கான கொடி ஏற்றப்பட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடந்தது.

    இதில், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்து, போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    மேலும் நேற்று முன்தினம் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா, ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் எம்.எம்.ஏ., செங்குட்டுவன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

    நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி., வெற்றிச் செல்வன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், ஆர்.டி.ஓ., சதீஷ்குமார், மாநில தடகள சங்க பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட தடகள சங்க செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் கிருஷ்ணன், விளையாட்டு துறை இணை இயக்குனர் புகழேந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், உடற்கல்வி இயக்குனர் வளர்மதி, மாநில தடகள சங்க மேலாளர் வினோத்குமார், நகர்மன்ற துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பேரூராட்சி தலைவர்கள் நாகோஜனஅள்ளி தம்பிதுரை, பர்கூர் சந்தோஷ்குமார், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நேற்றிரவு வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்த முருகேசன் இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
    • இது தொடர்பாக போலீசார் முதல்கட்ட விசாரணை நடத்தியதில் முருகேசன் என்பவரை முன்விரோதம் காரணமாக பிரபு கொலை செய்தது ெதரியவந்தது.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் தூய்மை காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முருகேசன் (17). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரபு (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்றிரவு வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்த முருகேசன் என்பவர் இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி கந்திகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் முதல்கட்ட விசாரணை நடத்தியதில் முருகேசன் என்பவரை முன்விரோதம் காரணமாக பிரபு கொலை செய்தது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குற்றவாளியை கோயமுத்தூரில் வைத்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
    • சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் என டி.எஸ்.பி. அலெக்ஸாண்டர் பாராட்டியுள்ளார்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முருகன். இவர் கல்லாவி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட செங்கல்பட்டி என்ற கிராமத்தில் தாய், மகன் ஆகிய இருவரும் ஜூலை 13.7.2022 அன்று நள்ளிரவு வீடு பூட்டப்பட்ட நிலையில் மர்ம நபர்களால் பெற்றோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளனர்.

    இந்நிலையில் அப்போதிய டி.எஸ்.பி. அலெக்ஸாண்டர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    அதில் தனிப்படை அதிகாரியாக செயல்பட்ட மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தனிப்படை போலீசாரின் உதவியுடன் கொலை சம்பந்தமாக இறந்தவர் களின் உறவினர்களுடன் நடத்திய தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது 24 மணி நேரத்தில் தாய் கமலா (50), மகன் குரு (17) ஆகிய இருவரையும் கள்ள காதல் விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி கொலை செய்த குற்றவாளியான திருப்பத்தூர் மாவட்டம் குறிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ராமதாஸ் என்பவரை கோயமுத்தூரில் வைத்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

    இதனால் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் என டி.எஸ்.பி. அலெக்ஸாண்டர் பாராட்டியுள்ளார்.

    இந்த துரித நடவடிக்கையை பாராட்டி சுதந்திர தினத்தன்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகனை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளார்.

    • பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    • 536 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி, நிகழ்ச்சியில் பேசினார்கள்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி ஓசூர் முல்லைநகர் பகுதியில் சீதாராம் நகரில் உள்ள அரசு உருது மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித ஜான் போஸ்கோ அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, ஓசூர் எம்.எல்.ஏ பிரகாஷ், மாநகராட்சி மேயர் .சத்யா ஆகியோர் கலந்து கொண்டு, அரசு மேல்நிலைப்பள்ளியில் 286 மாணவ, மாணவியர், உருது பள்ளியில் 71 பேர் மற்றும் புனித ஜான்போஸ்கோ பள்ளியில் 179 பேர் என மொத்தம் 536 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி, நிகழ்ச்சியில் பேசினார்கள்.

    மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், தலைமையாசிரியர்கள் அலெக்சாண்டர், தேவசேனா, புனித ஜான் போஸ்கோ பள்ளி தாளாளர் ஆஞ்சலா, பெற்றோர்கள், ஆசிரியர் கழக தலைவர்கள் மகேஷ்பாபு, அப்துல் முஜீப், முன்னாள் தலைவர் ரெட்டி, ஆசிரியர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், பகுதி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள்,மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தீயணைப்பு துறையினர் பெரிய ஏரியில் உள்ள பெண்ணின் உடலை மீட்டனர்.
    • விசாரணை மேற்கொண்டதில் திரு வண்ணாமலை மாவட்டம் புது தெரு பகுதியைச் சேர்ந்த சுமதி (வயது55) என்பது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டையில் உள்ள பெரிய ஏரியில் பெண் சடலம் இருப்பதாக சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் ஊத்தங்கரை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பெரிய ஏரியில் உள்ள பெண்ணின் உடலை மீட்டனர். விசாரணை மேற்கொண்டதில் திரு வண்ணாமலை மாவட்டம் புது தெரு பகுதியைச் சேர்ந்த சுமதி (வயது55) என்பது தெரியவந்தது.

    சுமதிக்கு 3 மகள் உள்ள தாகவும், இவர் 10 நாட்களாக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நீரிழிவு நோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் தனது மூன்றாவது பெண் லேகா உடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றிய தில் மனவேதனை அடைந்த சுமதி அரசு மருத்துவமனையில் இருந்து சிங்காரப்பேட்டை வந்து பெரிய ஏரியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • லாட்டரி சீட்டு விற்றதாக பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாபு (வயது48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • கைதான அவரிடம் இருந்து 24 லாட்டரி சீட்டும், 1700 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பனகல்தெரு பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாபு (வயது48) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து 24 லாட்டரி சீட்டும், 1700 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×