என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • இரவு நேரங்களில் இப்பகுதியில் நிற்கும் லாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்போன், பணம் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
    • நெடுஞ்சாலையில் லாரி டிரைவர்களை குறி வைத்து திருடினர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள குருபரப்பள்ளியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் லாரி ஓட்டுனர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் அடிக்கடி செல்போன் மற்றும் பணம் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு தொடர் புகார் வந்தது.

    இதையடுத்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசாரும் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமாக லாரிகள் நிறுத்துமிடத்தில் சுற்றிக்கொண்டிருந்த 2 வாலிபர்களை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த இரண்டு பேரையும் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கம்பம்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் (வயது20), அதே கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (21), ஆகியோர் இரவு நேரங்களில் இப்பகுதியில் நிற்கும் லாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்போன், பணம் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    இப்பகுதியில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தது இப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • சூளகிரி ஊராட்சியில் சுமார் ரூ.15 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பீட்டில் திட்ட வளர்ச்சி பணிகள்.
    • சூளகிரி ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியம்சூளகிரி ஊராட்சியில் சுமார் ரூ.15 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பீட்டில் திட்ட வளர்ச்சி பணிகளுக்கு சூளகிரிஊராட்சி மன்ற தலைவர் கலைசெல்விராமன் தலைமையில் சூளகிரி ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    சூளகிரி ஊராட்சியில் 15-வது நிதிக் குழு திட்டத்தின் கீழ் பேரிகை செல்லும் சாலை முதல் முனீஷ்வர் கோவில் வரை ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியும், காவல் நிலையம் எதிரில் உள்ள சலையில் ராமசந்திரன் வீடு வரை ரூ.7 லட்சத்தில் 32 ஆயிரமதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் ஆகிய பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் வட்டார வளர்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்னண், சிவக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சங்கீதா, ரமேஷ், பொறியாளர் சியாமளா, ஊராட்சி மன்ற துனை தலைவர்வரலஷ்மி, ஊராட்சி கழக செயலாளர் வெங்கடேஷ், ஒப்பந்தார்ர் ராஜா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ்செல்வன், அர்சனா ஆனந்த், நாராயனம்மா, அப்சர், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர் ஒழுக்கம், கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
    • மாணவர்களிடையே உள்ள தவறான எண்ணங்களை மாற்றி நல்வழி படுத்திட வேண்டும்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்தேகவுடா தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் திரையில் நேரடி ஒளிப்பரப்பை பார்த்து அதன் மூலம் பணிகள் விளக்கங்கள் குறித்து விழிப்புணர்வுகளை தெரிந்து கொண்டனர். எஸ்.எம்.சி தலைவர் கனிமொழி பிளாஸ்டிக் கவர் ஒழிப்பை துரிதபடுத்த வேண்டும், மாணவர் ஒழுக்கம், கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.

    பின்னர் பேசிய ஆசிரியர்கள் தமிழக முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர்கள், பள்ளி மேலாண்மை குழு அமைத்து மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி பெற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து உள்ளனர். அத்திட்டங்களை எஸ், எம், சி குழுக்கள் மாதந்தோரும் தவறாமல் கூட்டம் கூட்டி அரசு வீதி முறைகளை மாணவர்களுக்கு எடுத்து சென்று செயல்படுத்த வேண்டும் . மேலும் மாணவர்களிடையே உள்ள தவறான எண்ணங்களை மாற்றி நல்வழி படுத்திட வேண்டும். மாணவர்களுக்கு அறிவை வளர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என பல்வேறு கருத்துகள் எடுத்துரைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எஸ், எம், சி தலைவர் கனிமொழி, ஆசிரியர் வெங்கடேஷ், மற்றும் நிர்வாகிகள் ஜெபஸ்தின், அஸ்பர், உதவி தலைமை ஆசிரியர் சதீஷ், மற்றும் ஆசிரியர்கள் கணேசன் ஜோதிராணி, குமரேசன், நாகேஷ், மற்றும் எஸ்.எம்.சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கால கட்டத்தில பாண்டிதுரை, சக்தி, மல்லிகா ஆகிய 3 பேரும் ரத்தினகலாவிற்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர்.
    • மேலும் அவர்களை சாதி பெயரை கூறி திட்டினார்கள்.

    ஊத்தங்கரை,

    ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள ஆவரன்குட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டிதுரை (வயது 33). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் (32), மல்லிகா (36). கூலித் தொழிலாளர்கள்.

    ஊத்தங்கரை அருகே உள்ள கல்லூரை சேர்ந்தவர் ரத்தினகலா (48). இவரிடம் பாண்டிதுரை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கடனாக பெற்றார். அதே போல சக்தி மற்றும் மலலிகா ஆகியோர் ரூ.40 ஆயிரம் கடனாக பெற்றனர்.

    இதில் சக்தியும், மல்லிகாவும் ஆகியோர் வட்டியுடன் சேர்த்து ரூ.50 ஆயிரம் திரும்ப செலுத்தினார்கள். இந்த கால கட்டத்தில பாண்டிதுரை, சக்தி, மல்லிகா ஆகிய 3 பேரும் ரத்தினகலாவிற்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றனர். இந்த நிலையில் ரத்தினகலாவும், அவரது உறவினருமான வேலு (45) என்பவரும் சேர்நது பாண்டிதுரை, சக்தி, மல்லிகா ஆகியோரை மீண்டும் தங்களின் செங்கல் சூளைக்கு அழைத்து வந்து, வேலை செய்ய வேண்டும்.

    இல்லாவிட்டால் மீதம் உள்ள தொகையை தர வேண்டும் என கூறி மிரட்டி தாக்கினார்கள். மேலும் அவர்களை சாதி பெயரை கூறி திட்டினார்கள்.

    இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை கிராம நிர்வாக அலுவலர் பாபு சம்பவ இடத்திற்கு சென்று பாண்டிதுரை, சக்தி, மல்லிகா ஆகியோரை மீட்டார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பாபு கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் விசாரணை நடத்தி ரத்தினகலா, வேலு ஆகியோர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், கொத்தடிமை தடை சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • கணவன் திருப்பதிக்கும் அவருடைய உறவுக்காரப் பெண்ணுக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பழனிஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி வயது (22), இவரின் உறவுக்கார பெண்ணான வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ஜோதிகா வயது (22), ஆகிய இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஜோதிகாவுக்கு அடிக்கடி கருகலைப்பு ஏற்பட்டு குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையால் கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அதே போல் கணவன் திருப்பதிக்கும் அவருடைய உறவுக்காரப் பெண்ணுக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

    இதனால் மன விரக்தியடைந்த ஜோதிகா இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போச்சம்பள்ளி போலீஸாருக்கு அக்கம், பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் போலீஸார் விரைந்து சென்று ஜோதிகாவின் உடலை கைபற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, கிருஷ்ணகிரி கோட்டாட்சியாருக்கு விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். 

    • ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
    • குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

    தேன்கனிக்கோட்டை

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ராம ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

    மேலும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, விசேஷ பூஜைகள் நடைபெற்ற பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் நகர செயலாளர் பாலாஜி , இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திக், பாஜக மாவட்ட செயலாளர் பார்த்திபன், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • பிளஸ்-2 மாணவ மாணவியருக்கு அரசு இலவசமாக வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
    • சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்ட துணை சேர்மன் ஷேக்ரஷீத் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ஒசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ் வழிகாட்டுதலின் படி உத்தனப்பள்ளி அரசுமேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவ மாணவியருக்கு அரசு இலவசமாக வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்ட துணை சேர்மன் ஷேக்ரஷீத் கலந்து கொண்டு சிறப்புறையாற்றி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    மேலும் துப்புகாணப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் , தலைவர் கோவிந்தப்பா , ஊர் கவுண்டர் ராஜப்பா, முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், சூளகிரி தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் .ராமச்சந்திரன் , மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன் , மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராமமூர்த்தி ஒப்பந்ததாரர் சுரேஷ், தலைமை ஆசிரியர் ஜெகதீஷ் ,சுந்தரேஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ. 3 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை போடப்பட்டது.
    • ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் எம். எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சூளகிரி ஒன்றியம் பி.குருபரப்பள்ளி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி திட்டத்தில் 2021- 2022 ஆண்டில் சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை போடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியை ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் எம்,எல்,ஏ, துவக்கி வைத்தார். உடன் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், மற்றும் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கருணாகரன், கார்த்திக், மணிகண்டன், கழக நிர்வாகிகள்மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நடன போட்டி, பேச்சு போட்டி, மாறு வேட போட்டிகள் நடத்தப்பட்டன.
    • மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை பள்ளியின் நிறுவனர் வி.எம்.அன்பரசன் வழங்கி பாராட்டினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளியில் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகிறது.

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நடன போட்டி, பேச்சு போட்டி, மாறு வேட போட்டிகள் நடத்தப்பட்டன.

    தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை பள்ளியின் நிறுவனர் வி.எம்.அன்பரசன் வழங்கி பாராட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் சங்கீதா அன்பரசன், சி.பி.எஸ்.இ. பள்ளியின் முதல்வர் ஷர்மிளா, மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ரமணன், பள்ளி மேலாளர் பூபேஷ்குமார் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    • முகாமிற்கு பள்ளியின் தாளாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
    • ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு பரிசோதனை நடத்தி மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் கோஆப்ரேட்டிவ் காலனியில் இயங்கி வரும் கார்த்திக் மருத்துவமனை சார்பில் வி.மாதேப்பள்ளி கூட்டு ரோட்டில் உள்ள ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமிற்கு பள்ளியின் தாளாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இதில் கார்த்திக் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் கார்த்திக் தலைமையில் குழுவினர் பொதுநலம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு பரிசோதனை நடத்தி மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினார்கள்.

    இதில் வி.மாதேப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கடைபிடித்தல் தொடர்பான “சத்பவ்னாதி வாஸ்” நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, உறுதி மொழி வாசிக்க, அதை திரும்ப கூறி அனைத்து துறை அரசு ஊழியர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் பிராந்திய மக்களிடம் தேசிய மற்றும் வகுப்புவாத ஒற்றுமையை ஊக்குவித்தல் மற்றும் கடைபிடித்தல் தொடர்பான "சத்பவ்னாதி வாஸ்" நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, உறுதி மொழி வாசிக்க, அதை திரும்ப கூறி அனைத்து துறை அரசு ஊழியர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வேடியப்பன், குமரேசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னபாலமுருகன், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) சண்முகம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

    • ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி.
    • முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செங்குட்டுவன் தொடங்கி வைத்தார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டம் சார்பில் சாப்பரத்தி ஊராட்சி செல்லானூர் முதல் பனக்க முட்டலுவரை ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மற்றும் ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செங்குட்டுவன் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், தொழிலதிபர் சீனிவாசன், ஒன்றிய குழு துணை தலைவர் சசிகலா தசரா, ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன், செந்தாமரை தமிழரசன், காவேரி, ஒன்றிய குழு உறுப்பினர் பார்வதி சரவணன், பையூர் இளங்கோ, செல்வம், சக்திவேல், மாவட்ட பிரதிநிதி சவுந்தர்ராஜன், சக்திவேல், குமரன், சிவராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×