என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி மேலாண்மை குழு கூட்டம்"
- வளாகத்திற்குள் தெரு நாய்கள் புகுந்து பள்ளி மாணவர்களை அச்சுறுத்துவதால் பள்ளியில் சுற்று சுவர் உடனடியாக அமைக்க வேண்டும்,
- இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை அகற்ற வேண்டும்,
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் லில்லி மார்கிரேட் சோபியா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி வினோதினி சின்னதம்பி, வார்டு கவுன்சிலர் கௌரி சென்னீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பள்ளி வளாகத்திற்குள் தெரு நாய்கள் புகுந்து பள்ளி மாணவர்களை அச்சுறுத்துவதால் பள்ளியில் சுற்று சுவர் உடனடியாக அமைக்க வேண்டும், இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை அகற்ற வேண்டும், பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வசதிக்காக குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பெரும்பாலான குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஹேமலதா நன்றி கூறினார். கூட்டத்தில் அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது.
- ஜவ்வாதுமலை பள்ளியில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
போளூர்:
ஜவ்வாது மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்டிரேவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் ஆணைக்கிணங்க பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் கீதா தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் மன்னர் சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளி மானியம் பராமரிப்பு செலவு செய்தது ஒப்புதல் பெறப்பட்டது.
உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் செல்வம நன்றி கூறினார்.
- உடையாகுளம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைப்பெற்றது.
- ஆசிரியர்கள் தியாகராஜன் வனஜா ஜெயராமன் ஆகியோர் போதை பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர்
திருச்சி :
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியம் உடையாகுளம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் க.சண்முகம் தலைமை வகித்தார். ஆசிரியர் மனோகர் வரவேற்றார். ஆசிரியர்கள் தியாகராஜன் வனஜா ஜெயராமன் ஆகியோர் போதை பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வரங்கம் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் பன்னீர்செல்வம் உறுப்பினர்கள் சக்திவேல் ரவிக்குமார் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்து மாணவர்களிடமும் பொதுமக்களடையும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இல்லம் தேடி கல்வியில் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள பெற்றோர்களுக்குஅறிவுறுத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் நூலக புத்தகத்தை பயன்படுத்துவது குறித்தும் வாசிப்புத்தலன் மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
முடிவில் ஆய்வக உதவியாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.
- மாணவர் ஒழுக்கம், கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
- மாணவர்களிடையே உள்ள தவறான எண்ணங்களை மாற்றி நல்வழி படுத்திட வேண்டும்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்தேகவுடா தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் திரையில் நேரடி ஒளிப்பரப்பை பார்த்து அதன் மூலம் பணிகள் விளக்கங்கள் குறித்து விழிப்புணர்வுகளை தெரிந்து கொண்டனர். எஸ்.எம்.சி தலைவர் கனிமொழி பிளாஸ்டிக் கவர் ஒழிப்பை துரிதபடுத்த வேண்டும், மாணவர் ஒழுக்கம், கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.
பின்னர் பேசிய ஆசிரியர்கள் தமிழக முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர்கள், பள்ளி மேலாண்மை குழு அமைத்து மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி பெற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து உள்ளனர். அத்திட்டங்களை எஸ், எம், சி குழுக்கள் மாதந்தோரும் தவறாமல் கூட்டம் கூட்டி அரசு வீதி முறைகளை மாணவர்களுக்கு எடுத்து சென்று செயல்படுத்த வேண்டும் . மேலும் மாணவர்களிடையே உள்ள தவறான எண்ணங்களை மாற்றி நல்வழி படுத்திட வேண்டும். மாணவர்களுக்கு அறிவை வளர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என பல்வேறு கருத்துகள் எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எஸ், எம், சி தலைவர் கனிமொழி, ஆசிரியர் வெங்கடேஷ், மற்றும் நிர்வாகிகள் ஜெபஸ்தின், அஸ்பர், உதவி தலைமை ஆசிரியர் சதீஷ், மற்றும் ஆசிரியர்கள் கணேசன் ஜோதிராணி, குமரேசன், நாகேஷ், மற்றும் எஸ்.எம்.சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- குழந்தைகளின் ஒழுக்கத்தை பற்றியும் பள்ளியின் வளர்ச்சி பற்றியும் பள்ளியில் இடையில் நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும்.
- உறுப்பினர்கள் மொத்தம் 20 பேர் இவர்கள் மணிமேகலையை தலைவராகவும், ராஜேஸ்வரி துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர்.
தருமபுரி.
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாணவ, மாணவியர் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
இதில் குழந்தைகளின் ஒழுக்கத்தை பற்றியும் பள்ளியின் வளர்ச்சி பற்றியும் பள்ளியில் இடையில் நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் எனவும், பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்குச் செல்லும் பொழுது அறிவுரை வழங்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
இதில் உறுப்பினர்கள் மொத்தம் 20 பேர் இவர்கள் மணிமேகலையை தலைவராகவும், ராஜேஸ்வரி துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோகரன், வட்டார கல்வி அலுவலர் மணிகிருஷ்ணன், முன்னாள் மேலாண்மை குழு தலைவர் ஆசிரியர் ஸ்ரீராமுலு, பஞ்சாயத்து தலைவர் கஸ்தூரி சரவணன், உதவி தலைமை ஆசிரியர் சதாசிவம், ஆசிரியர் சிவகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பென்னாகரம்
பென்னாகரத்தை அடுத்த குள்ளனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
பல்வேறு அறிவுரைகளை பள்ளி மேலான்மை குழுவின் மாவட்ட கருத்தாளர் சுரேஷ் வழங்கினர். இதில் உறுப்பினர்கள் மொத்தம் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் ஒரு மனதாக எஸ். இளவரசி தலைவராகவும் திலகவதி துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெ டுக்கப்பட்ட அனைவரும் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் த.சிங்கார வேலன், பஞ்சாயத்து துனை தலைவர் கந்தர் ஆசிரியர்கள் அன்னபூரணி வளர்மதி லோகநாதன் சிவக்குமார் மணிவண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேப்பனப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு மறுகூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பள்ளி மேலான்மைகுழு தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் மாணவி களின் பெற்றோர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பள்ளிக்கு புதிய கட்டிடங்கள், மேசைகள், பள்ளி தேவையான உபக ரணங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மத்தூர்
மத்தூர் அருகே உள்ள களர்பதி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் நெப்போலியன் அனை வரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளாராக களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி கலந்துகொண்டார்.
இதனை தொடர்ந்து பள்ளியின் மேலாண்மைத் தலைவராக எஸ்.மகேஸ்வரி சீனிவாசன், துணைத் தலைவராக பூங்கொடி மாதப்பன் ஆகியோரை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ஒப்புதலோடு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இத்துடன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோவிந்தராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் மகேஸ்வரி மாதப்பன் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் மாது, ஒன்றிய மீனவரணி செயலாளர் எம்.ஆர்.முனுசாமி பள்ளியின் பொருளாளர் பூபதி, மலையாண்டஅள்ளி வேடி, மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளிடோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
மாரண்டஅள்ளி
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பெற்றோர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தங்க சரவணன் மற்றும் மாரண்டஅள்ளி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தம்மாள் முன்னிலையில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது.
இதில் தலைவர் பரிமளா துணைத் தலைவர் செந்தில்குமார் உள்பட 20 பேர் கொண்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மற்றும் இதில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.






