என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பட்டாசு வெடிகள் வைத்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
    • அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரளபள்ளி வனப்பகுதியில் 3 காட்டு யானைகள் முகாம் உள்ளது. இந்த காட்டு யானைகள் தற்போது சிகரளப்பள்ளி மற்றும் பதிமடுகு வனப்பகுதிகளில் மாறி மாறி உலா வருகிறது.

    இந்த நிலையில் கிராமத்தில் புகுந்த காட்டுயானை தக்காளி தோட்டத்தில் புகுந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட தக்காளி செடிகளை நாசம் செய்துள்ளது.

    இதையடுத்து சத்தம் கேட்டு வந்த விவசாயிகள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்து வனத்துறையின் பானம், பட்டாசு வெடிகள் வைத்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

    காட்டு யானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

    வேறு வனப்பகுதிக்கு காட்டு யானைகளை விரட்டவும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த 3 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர்.
    • ஓ.பன்னீர்செல்வம் சுய சிந்தனை இல்லாதவர்.

    கிருஷ்ணகிரி :

    கிருஷ்ணகிரி மாவட்டம் புளியஞ்சேரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம், எங்களை ஒன்றாக செயல்படலாம் வாருங்கள் என அழைக்கிறார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. இந்த இயக்கத்தில் ஒரு சாதாரண தொண்டனாக இருந்தவர். இந்த இயக்கத்திற்கு எந்தவிதமான தியாகமும் செய்யாதவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர் என கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

    சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எந்தவித சூழ்நிலையிலும் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட கூடாது. நான் உயிருள்ள வரை அவர்களை சேர்க்க விடமாட்டேன்.

    இதேபோல் டி.டி.வி.தினகரன் ஒரு மாயமான், அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். பல்வேறு காலக்கட்டங்களில் தன்நிலையை மாற்றி பேசி சுயநலவாதியாகவும், சந்தர்ப்பவாதியாகவும் அவர் இருந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் ஒரு இயக்கத்தில் கடுமையாக போராடி, பல சோதனைகளை சந்தித்து, பல அவமானங்களை சந்தித்து, அவற்றை வென்றெடுத்து இந்த நிலைக்கு வந்திருந்தால் அவர் தெளிவான முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது. அவர் ஒருவர் பின்னாலே இருந்து வந்தவர். அவர் சொல்வதை கேட்டு செயல்பட்டவர். சுய சிந்தனை இல்லாதவர்.

    அ.தி.மு.க.வில் உள்ள ஒரு தலைவர் நாட்டின் பிரதமர் சொன்னார் என்பதற்காகதான் நான் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என சொன்னால், அவர் எவ்வளவு சந்தர்ப்பவாதியாக இருக்க வேண்டும். அவருக்கு சுயமாக சிந்திக்க தெரிகிறதோ இல்லையோ, சுய நலக்காரராக இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சுய நலத்திற்காக கட்சியையும், கட்சி தலைமையையும் பயன்படுத்தி உள்ளார்.

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நபரை விமர்சிக்க கூட நாங்கள் வெட்கப்படுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிறை மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரிய வந்தது பிரசவ வலியால் தவித்த அந்த யானை குட்டியை ஈன்ற முடியாமல் இறந்து போனது தெரிய வந்தது.
    • பெண் யானையும், குட்டியையும் பொக்லைன் எந்திரத்தின் மூலம் குழி தோண்டி அங்கேயே அடக்கம் செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனசரகம் அய்யூர் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி கிராமங்களை நோக்கி வந்து செல்கின்றன.

    இந்நிலையில் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை வன சரகம் பெல்லட்டி அடுத்து கோவை பள்ளம் என்ற இடத்தில் ஒரு பெண் யானை இறந்து கிடப்பதாக தேன்கனிக்கோட்டை வனத்துறைகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி, தேன்கனிக்கோட்டை வன சரக அலுவலர் முருகேசன், கால்நடை மருத்துவர் பிரகாஷ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில் இருந்து கிடந்த பெண் யானைக்கு 30 வயது இருக்கும் என்பதும், நிறை மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரிய வந்தது பிரசவ வலியால் தவித்த அந்த யானை குட்டியை ஈன்ற முடியாமல் இறந்து போனது தெரிய வந்தது.

    அதன் பின்னர் கால்நடை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மூலம் இறந்த யானையின் உடலை அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது வயிற்றில் இருந்து குட்டி யானையும் இறந்து கிடந்தது.

    இதையடுத்து பெண் யானையும், குட்டியையும் பொக்லைன் எந்திரத்தின் மூலம் குழி தோண்டி அங்கேயே அடக்கம் செய்தனர்.

    பிரசவ வலியால் குட்டியை ஈன்ற முடியாமல் யானை இருந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானை இறந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எம்.ஜி ரோடு வரை ரூ.5 லட்சம் மதிப்பில், புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்படவுள்ளது.
    • நிகழ்ச்சியில், பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.டி.ஜெயராமன் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூரில், கோட்டை பகுதி முதல் எம்.ஜி ரோடு வரை ரூ.5 லட்சம் மதிப்பில், புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்படவுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில், பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.டி.ஜெயராமன் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார். மேலும் இதில், துணைத்தலைவர் சீனிவாச ரெட்டி, ஒன்றிய கவுன்சிலர் முனிரத்னா முனிராஜ், வார்டு உறுப்பினர்களும் மற்றும் ஊராட்சி செயலர் சர்வேஷ் ரெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    • ஆண்டு இறுதியில் சிறந்து விளங்கும் குழுவிற்கு சுழற்கோப்பை வழங்கப்படும என்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளியில் 2022-2023-ம் ஆண்டிற்கான மாணவ தலைமை பதவியேற்பு விழா நடைபெற்றது.

    ஓசூர் செயிண்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரியின் செயலாளரும், அதியமான் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலருமான லாசியா தம்பிதுரை

    சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    பள்ளியின் தாளாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    பள்ளியின் முதல்வர் பி.என். அசோக் பதவி யேற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்.தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இந்த கல்வி ஆண்டு முழுவதும் பதவியில் இருந்து ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி கல்வி, ஒழுக்கம், விளையாட்டு போன்ற அனைத்து துறைகளிலும் குழு மாணவர்களை வழி நடத்துவார்கள் என்றும், ஆண்டு இறுதியில் சிறந்து விளங்கும் குழுவிற்கு சுழற்கோப்பை வழங்கப்படும என்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    முடிவில் பள்ளியின் துணை முதல்வர் இம்மானுவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பொறியாளர் சரவணன், சாதிக், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்க துணை தலைவர் எம்.கவுசிக் தேவ் மதியழகன் வரவேற்று பேசினார்.
    • 264 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த பெண்கள் சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணியும், 176 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தை திருநெல்வேலி எஸ்.ஏ.வி. பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் பெற்றன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம், தமிழ்நாடு தடகள சங்கத்துடன் இணைந்து நடத்திய 35-வது தமிழ்நாடு மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கிருஷ்ணகிரியில் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.

    இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4,200 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்களில் 14, 16, 18, 20 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்ட போட்டி, குண்டு எறிதல் உள்பட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றன.

    நேற்று இறுதி போட்டிகள் நடந்தன. தொடர்ந்து நிறைவு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தடகள சங்க துணை தலைவரும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.அன்பழகன் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்க துணை தலைவர் எம்.கவுசிக் தேவ் மதியழகன் வரவேற்று பேசினார்.

    தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா, கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்க தலைவரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன், உதவி கலெக்டர் சதீஷ்குமார், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முடிவில் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்க பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    தொடர்ந்து விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. ஒவ்வொரு வயதிற்கு உட்பட்ட சிறந்த வீரர் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த விளையாட்டு வீரர்களாக அபினவ், அசோக்குமார், பாலஜீவா, ரத்தீஷ் ஆகியோரும், வீராங்கனைகளாக கோபிகா, அபிநயா, ருத்திகா, கொலேசியா ஆகியோரும் பரிசுகளை பெற்றனர்.

    264 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த பெண்கள் சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணியும், 176 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தை திருநெல்வேலி எஸ்.ஏ.வி. பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் பெற்றன.

    ஆண்கள் பிரிவில் 217 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியும், 170 புள்ளிகள் பெற்று திருநெல்வேலி எஸ்.ஏ.வி. பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமியும் பெற்றன.

    ஒட்டு மொத்த ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன் பட்டத்தை 481 புள்ளிகள் பெற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியும், 2-வது இடத்தை 346 புள்ளிகள் பெற்று திருநெல்வேலி எஸ்.ஏ.வி. பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் பெற்றன. 

    • மூதாட்டிக்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
    • மேலும் ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட எச்சம்பட்டி கிராமத்தில் 60 வயதான பெண்ணிற்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் மூதாட்டிக்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

    இந்நிலையில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் உத்தரவின்படி எச்சம்பட்டி கிராமத்தில் நேற்று மாவட்ட பூச்சியல் வல்லூனர் முத்துமாரியப்பன், சுகாதார மேற்பார்வையாளர் ஏகாம்பரம், மருத்துவ குழுவினர் முகாமிட்டு வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டது.

    வீடுகளில் தொட்டிகளில் இருந்த தண்ணீரை பரிசோதனை செய்து அபேட் ஊற்றினர். காய்ச்சல் அறிகுறி உள்ளதா என கணக்கெடுத்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

    • கடுகநத்தம் பகுதியில் கர்நாடக மாநில மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கடுக நந்தம் கிராமத்தை சேர்ந்த குமார் உள்பட 4 பேரும் கர்நாடக மாநிலத்தில் வாங்கி வந்து விற்ற 4 பேரை கைது செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த மாவணட்டி மற்றும் கடுகநத்தம் பகுதியில் கர்நாடக மாநில மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் அஞ்செட்டி போலிஸ் சப்-இன்ஸ்பக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாவனட்டி கிராமத்தை சேர்ந்த சாமன்னா, சுப்பிரமணி, நாதன் ஆகியோருடம் கடுக நந்தம் கிராமத்தை சேர்ந்த குமார் உள்பட 4 பேரும் கர்நாடக மாநிலத்தில் வாங்கிய மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து அஞ்செட்டி போலீசார் 4 நபர்களையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவரிடமிருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேைரயும் ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    • 90 குடும்பங்கள் எங்கள் தரப்பிலும், 10 குடும்பத்தினர் தனியாக உள்ளனர்.
    • கோவிலை பூட்டிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடு்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா கனகமுட்லு அருகே உள்ள மோட்டூர் காலனி பகுதியை சேர்ந்த நாகராஜ், சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உதவி கலெக்டர் அலுவலகம் வந்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் இந்த கிராமத்தில் வசித்து வருகிறோம். ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவோம். எங்கள் கிராமத்தில் மொத்தம் 100 குடும்பங்கள் உள்ளன. இதில் 90 குடும்பங்கள் எங்கள் தரப்பிலும், 10 குடும்பத்தினர் தனியாக உள்ளனர். அவர்கள் ஊரில் திருவிழாவின் போது தகராறு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 11.1.2022 அன்று எங்கள் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலை எதிர் தரப்பினர் பூட்டி விட்டனர்.

    இது தொடர்பாக நாங்கள் கேட்ட போது தகராறு செய்தனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி கோவிலை பூட்டிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர். 

    • இவர் மீது வேப்பனப்பள்ளி போலீசில் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
    • கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அவரை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    வேப்பனபள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் என்கின்ற கமலேசன் (வயது43). இவர் மீது வேப்பனப்பள்ளி போலீசில் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு கஞ்சா விற்பனையில் வேப்பனப்பள்ளி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் பல்வேறு வழக்குகள் மற்றும் கஞ்சா விற்பனை வழக்கில் தொடர்புடைய இவரை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் பரிந்துரையின் பெயரில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அவரை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து பசவராஜ் நின்ற கமலேசன் என்பவரை வேப்பனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் குண்டாஸ் வழக்குப்பதிவு செய்து சிறையில் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கஞ்சா வியபாரி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளதால் தீர்த்தம் சுற்றுவட்டார கிராம கஞ்சா வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர்.

    • கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • இங்கு சனிக்கிழமை தோறும் சுற்றுவட்டார கிராமமான பொனல் நத்தம், காளிங்காவரம், வேப்பனப் பள்ளி, வேம்பள்ளி, பேரிகை, அத்திமுகம் பகுதியில் இருந்து வந்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் பஸ்தலபள்ளி ஊராட்சியில் 100 ஆண்டு பழைமையானஸ்ரீ திம்மராய சுவாமி பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இங்கு சனிக்கிழமை தோறும் சுற்றுவட்டார கிராமமான பொனல் நத்தம், காளிங்காவரம், வேப்பனப் பள்ளி, வேம்பள்ளி, பேரிகை, அத்திமுகம், பிஸ்திம்மசந்திரம், நெரிகம், சின்னார், மேலுமலை, சூளகிரி உள்பட பல பகுதியில் இருந்து வந்தனர்.

    நேற்று கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் சுவாமி தரிசனம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

    • பெண்ணேஸ்வரமடம் துணை மின் நிலையத்தில் வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெண்ணேஸ்வரமடம் துணை மின் நிலையத்தில் வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காவேரிப்பட்டணம் நகரம், தளி அள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூர், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூர், தேவர்முக்குளம், தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பாளையம், மில்மேடு, இந்திரா நகர், குண்டலப்பட்டி, கத்தேரி, கருககன்சாவடி, மேல்மக்கான், தாலாமடுவு, பனகமுட்லு, தளியூர், மோரனஅள்ளி, தொட்டிப்பள்ளம், சாப்பர்த்தி, கொத்தலம், குண்டாங்காடு, போடரஅள்ளி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×