என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது எடுத்த படம்.
ராயக்கோட்டை அருகே மூதாட்டிக்கு டெங்கு காய்ச்சல்; மருத்துவ குழுவினர் வீடு, வீடாக ஆய்வு
- மூதாட்டிக்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
- மேலும் ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட எச்சம்பட்டி கிராமத்தில் 60 வயதான பெண்ணிற்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் மூதாட்டிக்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் உத்தரவின்படி எச்சம்பட்டி கிராமத்தில் நேற்று மாவட்ட பூச்சியல் வல்லூனர் முத்துமாரியப்பன், சுகாதார மேற்பார்வையாளர் ஏகாம்பரம், மருத்துவ குழுவினர் முகாமிட்டு வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர்.
மேலும் ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டது.
வீடுகளில் தொட்டிகளில் இருந்த தண்ணீரை பரிசோதனை செய்து அபேட் ஊற்றினர். காய்ச்சல் அறிகுறி உள்ளதா என கணக்கெடுத்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.






