search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: கே.பி.முனுசாமி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: கே.பி.முனுசாமி

    • ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர்.
    • ஓ.பன்னீர்செல்வம் சுய சிந்தனை இல்லாதவர்.

    கிருஷ்ணகிரி :

    கிருஷ்ணகிரி மாவட்டம் புளியஞ்சேரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம், எங்களை ஒன்றாக செயல்படலாம் வாருங்கள் என அழைக்கிறார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. இந்த இயக்கத்தில் ஒரு சாதாரண தொண்டனாக இருந்தவர். இந்த இயக்கத்திற்கு எந்தவிதமான தியாகமும் செய்யாதவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர் என கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

    சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எந்தவித சூழ்நிலையிலும் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட கூடாது. நான் உயிருள்ள வரை அவர்களை சேர்க்க விடமாட்டேன்.

    இதேபோல் டி.டி.வி.தினகரன் ஒரு மாயமான், அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். பல்வேறு காலக்கட்டங்களில் தன்நிலையை மாற்றி பேசி சுயநலவாதியாகவும், சந்தர்ப்பவாதியாகவும் அவர் இருந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் ஒரு இயக்கத்தில் கடுமையாக போராடி, பல சோதனைகளை சந்தித்து, பல அவமானங்களை சந்தித்து, அவற்றை வென்றெடுத்து இந்த நிலைக்கு வந்திருந்தால் அவர் தெளிவான முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது. அவர் ஒருவர் பின்னாலே இருந்து வந்தவர். அவர் சொல்வதை கேட்டு செயல்பட்டவர். சுய சிந்தனை இல்லாதவர்.

    அ.தி.மு.க.வில் உள்ள ஒரு தலைவர் நாட்டின் பிரதமர் சொன்னார் என்பதற்காகதான் நான் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என சொன்னால், அவர் எவ்வளவு சந்தர்ப்பவாதியாக இருக்க வேண்டும். அவருக்கு சுயமாக சிந்திக்க தெரிகிறதோ இல்லையோ, சுய நலக்காரராக இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சுய நலத்திற்காக கட்சியையும், கட்சி தலைமையையும் பயன்படுத்தி உள்ளார்.

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நபரை விமர்சிக்க கூட நாங்கள் வெட்கப்படுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×