என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகாமில் ஒருவருக்கு மருத்துவர் பரிசோதனை செய்த காட்சி.
கிருஷ்ணகிரியில் கார்த்திக் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
- முகாமிற்கு பள்ளியின் தாளாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
- ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு பரிசோதனை நடத்தி மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கோஆப்ரேட்டிவ் காலனியில் இயங்கி வரும் கார்த்திக் மருத்துவமனை சார்பில் வி.மாதேப்பள்ளி கூட்டு ரோட்டில் உள்ள ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு பள்ளியின் தாளாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இதில் கார்த்திக் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் கார்த்திக் தலைமையில் குழுவினர் பொதுநலம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு பரிசோதனை நடத்தி மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினார்கள்.
இதில் வி.மாதேப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






