என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை அமைப்பதற்கான பூமிபூஜையை பிரகாஷ் எம்,எல்,ஏ, தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
பி.குருபரப்பள்ளி ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
- ரூ. 3 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை போடப்பட்டது.
- ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் எம். எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சூளகிரி ஒன்றியம் பி.குருபரப்பள்ளி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி திட்டத்தில் 2021- 2022 ஆண்டில் சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை போடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் எம்,எல்,ஏ, துவக்கி வைத்தார். உடன் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், மற்றும் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கருணாகரன், கார்த்திக், மணிகண்டன், கழக நிர்வாகிகள்மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






