என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 மாடுகள் பலி"

    • இவருக்கும், குப்புசாமி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
    • நேற்று ருக்குமணியின் 2 பசுமாடுகள் கொட்டகையில் இறந்து கிடந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள பண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் ருக்குமணி. இவர் பசுமாடுகள் வளர்த்து வந்தார். இவருக்கும், குப்புசாமி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    நேற்று ருக்குமணியின் 2 பசுமாடுகள் கொட்டகையில் இறந்து கிடந்தது.

    இது குறித்து அவர் சிங்காரபேட்டை போலீசில் குப்புசாமி என்பவர் தீவனத்தில் யூரியாவை கலந்து கொடுத்ததால் எனது பசுமாடுகள் இறந்துள்ளது என்று கூறியிருந்தார்.

    அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து குப்புசாமியை தேடி வருகின்றனர்.

    ×