என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் ஊராட்சியில்  கிராமசபைக் கூட்டம்
    X

    மத்தூர்பதி ஸ்ரீ காளியம்மன் கோவில் வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமையில் சுதந்திர தின கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    மத்தூர் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்

    • பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களாக பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தியிடம் வழங்கினர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி, மத்தூர்பதி ஸ்ரீ காளியம்மன் கோவில் வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமையில் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலைஞர் வீடு வழங்குதல், ஜெல்ஜீவன்குடிநீர் அமைத்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் குடிநீர், கழிவு நீர் கால்வாய் அமைத்தல், சாலை அமைத்தல், தெருவிளக்கு, முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களாக பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தியிடம் வழங்கினர்.

    இக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பர்வின்தாஜ் சலீம், மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தகுமாரி, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரவி, வார்டு உறுப்பினர்கள், வருவாய் துறை அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியார்கள், மக்கள் நல பணியாளர் ராஜா, சைல்டு லைன் பணியாளர்கள், சுய உதவிக் குழு பெண்கள் ஊர் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உராட்சி செயலர் வெங்கடேசன் செய்திருந்தார்.

    Next Story
    ×