என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோசடியான தகவல் மூலம் தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.8 லட்சத்து 59 ஆயிரம் அபேஸ்
- வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு உள்ளதால் சான்றிதழ்களை தயார் செய்ய பணம் செலவாகும்.
- கொஞ்சம்,கொஞ்சமாக ரூ.8 லட்சத்து 59 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் அம்மன் நகரை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 26). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
சமீபத்தில் இவரது செல்போனுக்கு வந்த ஒரு தகவலில் வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு உள்ளதாகவும், இதற்காக சான்றிதழ்களை தயார் செய்ய பணம் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை நம்பிய சிவகுமார் அந்த தகவலை நம்பி கொஞ்சம்,கொஞ்சமாக ரூ.8 லட்சத்து 59 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் காலம் கடந்த பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிவகுமார் இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற முதியவர் சின்னப்பராஜ் என்பவருக்கு மோசடியான தகவல்களை தெரிவித்து இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் அனுப்பி வைத்தால் பதிலுக்கு பல மடங்கு அமெரிக்க டாலராக அனுப்புவதாக ஏமாற்றியுள்ளனர். .இதைநம்பி அவரும் பணத்தை அனுப்பி வைத்து விட்டு ஏமாந்துள்ளார். இதுகுறித்து சின்னப்பராஜ் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் தந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






