என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே கல்லூரி மாணவி மாயம்
- கல்லூரிக்கு சென்று விட்டு அவர் இரவு வீட்டில் படுத்து தூங்கினார்.
- மறுநாள் காலையில் பார்த்த போது மோனிகா காணவில்லை.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள மாடரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். சவர தொழிலாளியான இவர் கோவையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் மோனிகா (வயது19). இவர் ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று விட்டு அவர் இரவு வீட்டில் படுத்து தூங்கினார். பின்னர் மறுநாள் காலையில் பார்த்த போது மோனிகா காணவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து மத்தூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
Next Story






