என் மலர்
உள்ளூர் செய்திகள்

போதிய விலை கிடைக்காதனால் அலகுபாய் தேசிய நெடுஞ்சாலை ஒரமாக கொட்டபட்டுள்ள தக்காளி பழங்கள்.
தக்காளி விலை கடும் வீழ்ச்சி
- தக்காளி பழங்களை தோட்டத்தில் பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.
- தக்காளி செடிகளும், பழங்களும் கால்நடைகளுக்கு உணவாக மாறி வருகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்று வட்டாரங்களில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதனால் சூளகிரி சுற்றுவட்டார விவசாயிகள் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளனர். இந்த நிைலயில் பலர் தக்காளி பழங்களை தோட்டத்தில் பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.
இதனால் தக்காளி செடிகளும், பழங்களும் கால்நடைகளுக்கு உணவாக மாறி வருகிறது. தக்காளி மார்க்கெட்டில் இருப்பு வைக்க முடியாமல் தக்காளியை சாலை ஒரமாக கொட்டும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது.
Next Story