என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோ-கோ போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் தங்கப்பதக்கம் வென்று சாதனை
- சாதனை படைத்த மாணவிகளுக்கு பள்ளியில் மாணவிகள் கைத்தட்டி, மலர்களை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- ஓட்டப்பந்தயத்தில் மத்தூர் வாலிபர் தங்க பதக்கம் வென்றார்.
கிருஷ்ணகிரி,
நேபாள நாட்டில் யூத் அண்டு ஸ்போர்ட்ஸ் பிரமோஷன் அசோசியேசன் ஆப் இந்திய அமைப்பு மூலம், இந்தியா நேபால் நாட்டு அணிகளுக்கு இடையே தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது.
இதில் இந்திய கோ-கோ அணிக்காக கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 15 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டிகள் கடந்த 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடந்தது.
தேசிய அளவிலான இந்த போட்டியில் 26:2 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணிக்காக விளையாடிய கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணியினர் வெற்றி பெற்று தங்கம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவியர் மற்றும் அணியை வழி நடத்திய உடற்கல்வி ஆசிரியருக்கு நேற்று பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நவாப் தலைமை தாங்கினார், பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்புரையாற்றினார்.
இந்த நிழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செங்குட்டுவன், நகராட்சி தலைவர் பரிதாநவாப் ஆகியோர் பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்று, பள்ளிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவிகள் மற்றும் இவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் மாணிக்கம் ஆகியோருக்கு மாலை அணிவித்து, வெற்றி கோப்பைகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன், மாவட்ட கல்வி ஆய்வாளர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. நரசிம்மன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி சுவேதாராணி விஜயராம், நகர்மன்ற உறுப்பினர்கள் பாலாஜி, சீனிவாசன், சுரேஷ்குமார், சுனில்குமார், முகமதுஆசிப், மதன்குமார் மற்றும் திருமலைச்செல்வன், கோபிநாத், கிருஷ்ணன், வேலு, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் மகாலட்சுமி, திவ்யலட்சுமி, அசீனாபேகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாணவிகளை பாராட்டி னர். முன்னதாக மேளதாளங்க ளுடன் ஊர்வலமாக வந்த மாணவிகளுக்கு பள்ளியில் மாணவிகள் கைத்தட்டி, மலர்களை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதேபோல மத்தூர் அருகேயுள்ள கரிங்காலிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 21) என்பவர் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை 4.37 வினாடியில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு ஊர் பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






