என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர்களுக்கு அமைச்சர் காந்தி அறிவுரை"
- மாணவர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது.
- போதை பழக்கம், தனிமனித பிரச்சினை அல்ல, அது சமுதாய பிரச்சினையாகும்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆர்.வி. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக்கல்லூரி அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார். இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்காந்தி தலைமையில், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அமைச்சர் காந்தி நிகழ்ச்சியில் பேசியதாவது:-
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது. இந்த பழக்கத்தால், உடல்நலம் கெடுவது மட்டுமின்றி, மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை மற்றும் மனக்கவலை ஏற்பட்டு நிம்மதி இழக்க நேரிடும்.
வாழ்வில் விரக்தி ஏற்படும். போதை பழக்கம், தனிமனித பிரச்சினை அல்ல, அது சமுதாய பிரச்சினையாகும்.
இதனால் குற்றங்கள் பெருகும் அபாயம் உண்டு. எனவே, இதனை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும். போதை பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த கூட்டு நடவடிக்கை தேவை. மாணவர்கள், போலீசார் மட்டுமின்றி பொதுமக்களும், இணைந்து கூட்டு நடவடிக்கையாக போதை பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் போதை பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களை, பெற்றோர், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார்.
ஓசூர் எம்.எல்ஏ.ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் பேசினர். ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, முன்னாள் எம்.எல்.ஏ.முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார், தி.மு.க. பகுதி செயலா ளர்கள்வெங்கடேஷ், ராமு, திம்மராஜ் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், பள்ளி தலைமையாசி ரியர்,மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் நன்றி கூறினார்.






