என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொரோனாவுக்கு முதியவர் பலி
- சமீபத்தில் இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது.
- இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இந்திராகாந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 66).
இவருக்கு சமீபத்தில் இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சீனிவாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சீனிவாசனை சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து 4 நாட்களுக்கு மேலாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






