என் மலர்
கிருஷ்ணகிரி
- ஓட்டலில் திருட்டுத்தனமாக ராமச்சந்திரன் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது
- போலீசார் அந்த ஓட்டலில் திடீர் சோதனை நடத்தினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள பிள்ள கொட்டாய் பகுதியில் பர்கூர் அத்திமங்கலத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 32) என்ற வாலிபர் சாலையோர ஓட்டல் நடத்தி வருகிறார்.
அந்த ஓட்டலில் திருட்டுத்தனமாக ராமச்சந்திரன் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ராமச்சந்திரன் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 68 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மாநில சங்கத்தின் 23-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
- மாநில நிர்வாகிகளும், தொழிலாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
ஓசூர்,
ஓசூரில், தமிழ்நாடு அமைப்புசாரா உடல் உழைப்பு மாநில சங்கத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் மாநில சங்கத்தின் 23-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, மாநில தலைவர் வக்கீல் எம்.பி. இளஞ்சூரியன் தலைமை தாங்கி, பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
இதில், மாநில நிர்வாகிகளும், தொழிலாளர்களும் திரளாக கலந்து கொண்டனர். .
மேலும், ஆன்லைன் மூல பெறப்பட்ட ஆணையை, இளஞ்சூரியன் தொழிலாளர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விசைத்தறி பிரிவு மாவட்ட செயலாளர் குணசேகரன். வக்கீல் மனோகர். அலுவலக நிர்வாகி சத்தியா.
வக்கீல் வனதாட்சி, மற்றும் வினோதினி. ரக்ஷித், பாஸ்கர். வெங்கட்ரமணப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் இப்பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
- இந்த பணியினை நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், 17 ஏக்கர் பரப்பளவில் சின்ன ஏரி அமைந்துள்ளது. ஏரியை சுற்றிலும் குப்பை கூளங்கள் சேர்ந்திருந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் இப்பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணியினை நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் (பொ) சவரணன் முன்னிலை வகித்தார்.
இதையடுத்து, சின்ன ஏரியை சுற்றியுள்ள, 1.5 கி.மீ., தூரத்தை இந்தியன் சுவஜ்ஜதா லீக் மூலம் இணையத்தில் பதிவு செய்த, 120 தன்னார்வலர்கள் சுத்தம் செய்தனர். அவர்களுக்கு 'கிருஷ்ணகிரி கிங்' என எழுதப்பட்ட 'டீசர்ட்' மற்றும் தொப்பி வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகராட்சி துப்புரவு அலுவலர் மோகனசுந்தரம், துப்புரவு ஆய்வாளர்கள் உதயகுமார், சந்திரகுமார் மற்றும் தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.
- பல்வேறு இடங்களிலும் அந்த இளம்பெண் குறித்து விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
- செல்வம் (வயது 24) என்ற வாலிபர் அந்த மாணவியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்டம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் பர்கூர் அருகேயுள்ள அஞ்சநாயக்கன்பள்ளி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 15-ந்தேதி முதல் அவரை காணவில்லை என்று கூறப்படுகிறது.பல்வேறு இடங்களிலும் அந்த இளம்பெண் குறித்து விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் திரு வண்ணாமலை மாவட்டம் ஸ்ரீவலம் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 24) என்ற வாலிபர் அந்த மாணவியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அந்த மாணவியின் தாய் தந்த புகாரின்பேரில் பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவியையும் அவரை கடத்தி சென்றதாக கூறப்படும் வாலிபரையும் தேடி வருகின்றனர்.
- கள்ள சாராயத்தை வாங்கி வந்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- லாரி டயரின் டியூபில் சாராயத்தை கடத்தி விற்பனைக்கு கொண்டு வந்தபோது அவரை வளைத்து பிடித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டை அருகேயுள்ள நெல்லிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 29).
இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையிருந்து கள்ள சாராயத்தை வாங்கி வந்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பரசுராமன் லாரி டயரின் டியூபில் சாராயத்தை கடத்தி விற்பனைக்கு கொண்டு வந்தபோது அவரை வளைத்து பிடித்தனர்.
அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட பரசுராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சோதனைக்கு பிறகு ஓசூர் அலுவலகத்தை போலீசார் சீல் வைத்தனர்.
- ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், 16 ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த வரட்டம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 46). முன்னாள் ராணுவ வீரர். கடந்த 9-ந் தேதி இவருடைய தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து புகார் மனுவை கொடுத்தனர்.
அதில் யுனிவர் காயின் என்ற பெயரில் டிஜிட்டல் காயின் நிறுவனத்தை நடத்திய ஓசூர் ராமகிருஷ்ணா நகர் அருண்குமார், கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்த நந்தகுமார், மத்தூர் அருகே கிட்டனூர் சங்கர், பிரகாஷ், பர்கூர் செட்டிப்பள்ளியை சேர்ந்த சீனிவாசன், தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை சேர்ந்த வேலன் ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் என்னை சந்தித்து பேசி னர். டிஜிட்டல் காயின் வாங்கி னால் குறைந்த நாட்களில் அதிக லாபம் கிடைக்கும் என அவர்கள் கூறினார்கள்.
மேலும் அவர்கள் நடத்தி வந்த டிஜிட்டல் காயின் நிறுவனத்தில் என்னை ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் தொகை முதலீடு செய்ய வைத்தனர்.
அதில் எனக்கு சிறிதளவு வருமானம் வந்தது. இதை தொடர்ந்து எனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் 60 பேரை அதில் முதலீடு செய்ய வைத்தேன். அவர்களுக்கும் சிறிதளவு லாபம் கிடைத்தது. இதைத்தொடர்ந்து யுனிவர் காயின் என்ற பெயரில் இணையதள பக்கத்தை ஏற்படுத்தி எங்களுக்கு லாபம் இருக்கும் தகவலை விளம்பரப்படுத்தினர். அதை நம்பி ஏராளமானவர்கள் அதில் பணத்தை முதலீடு செய்தனர்.
முதலில் 2 வார காலம் பணம் கொடுத்து விட்டு பின்னர் அந்த இணையதள பக்கத்தை முடக்கி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களின் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 50-க்கும் மேற்பட்டவர்கள் மோசடி புகாாில் உள்ளவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதன்படி ஓசூரில், தேன்கனிக்கோட்டை சாலையில் அருண்குமார் அலுவலகம், கிருஷ்ணகிரி நந்தகுமார், மத்தூர் சங்கர், பிரகாஷ், பர்கூர் சீனிவாசன், தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வேலன் வீடுகள் உள்பட 8 இடங்களில் ஒரே நேரத்தில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனைக்கு பிறகு ஓசூர் அலுவலகத்தை போலீசார் சீல் வைத்தனர்.
சோதனையில் பிரகாஷ் என்பவரது வீட்டில் 12 பவுன் நகையும், சீனிவாசன் என்பவரது வீட்டில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஒரு சொகுசு கார், ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஒரு கார், ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரூ.1.25 லட்சம் ரொக்கம், என ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், 16 ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பிரகாஷ், சீனிவாசன் ஆகிய 2 பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- வீட்டில் யாரோ வந்திருப்பது போல சத்தம் கேட்கிறது என்று தெரிவித்துள்ளார்.
- வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே யுள்ள கட்டிகானபள்ளி பகுதியை சேர்ந்தவர் ரகமதுல்லா (வயது 37). இவர் வனத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது குடும்பத்து டன் ராயக்கோட்டை அருகேயுள்ள பூங்குறிச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.
ரகமதுல்லாவின் வீட்டு மாடியில் உள்ள அறையில் உடல்நிலை சரியில்லாத அவரது தந்தை பாஷா மட்டும் தங்கியிருந்தார்.
இந்நிலையில் ரகமதுல்லாவின் செல்போனுக்கு பேசிய பாஷா கீழே உள்ள வீட்டில் யாரோ வந்திருப்பது போல சத்தம் கேட்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரகமதுல்லா ஊருக்கு விரைந்து வந்தார்.அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
அதிர்ச்சி அடைந்த ரகமதுல்லா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
அதில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ரகமதுல்லா புகார்
செய்தார் .
போலீசார் வழக்கு பதிவு செய்து வனத்துறை அதிகாரி வீட்டில் கைவரிசை கட்டிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
- தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமானோரை ஏமாற்றி, பல கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர்.
- பண மோசடி செய்த ஆறு பேரும் அவர்களுக்குள்ளாகவே மாறி, மாறி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து நாடகமாடுகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த வரட்டம்பட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரகாஷ் தலைமையில், 60-க்கும் மேற்பட்டோர் கடந்த 9-ந்தேதி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் ஓசூர், கிருஷ்ணகிரி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 6 பேர் யுனிவர் காயின் என்ற பெயரில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி வருவதாகவும், டிஜிட்டல் காயின் வாங்கினால் குறைந்த நாட்களில் அதிக லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறி அவர்கள் நடத்தி வரும் 'யுனிவர் காயின்' நிறுவனத்தில், ரூ.7.70 லட்சம் முதலீடு செய்ய வைத்தனர்.
அதில், சிறிதளவில் வருமானம் வந்தது. இதையறிந்து எனக்கு தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள், 60 பேர் 'யுனிவர் காயின்' நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அவர்களுக்கும் சிறிதளவு பணம் லாபம் என்ற பெயரில் வாரா வாரம் கிடைத்தது.
இதையடுத்து அந்த நிறுவனம் சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. அதில், ஆப்பிள் ஐ-போன் பரிசு, கோவா, தாய்லாந்து, சுற்றுலா அதிகமாக ஆட்கள் சேர்ப்பவர்களுக்கு பிளாட், கார் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.
மேலும், 'யுனிவர்காயின்' இணையதள பக்கத்தையும் ஏற்படுத்தி அதில் நமது பணம் குறித்த விவரங்கள் இருக்குமாறு செய்ததால் அதை நம்பி ஏராளமானோர் தங்கள் பணத்தை முதலீடு செய்தனர்.
அவர்களுக்கும் இரண்டு வாரம் மட்டும் பணத்தை கொடுத்து விட்டு பின்னர் பணம் எதுவும் கொடுக்காமல் இணையதளத்தை முடக்கி மோசடி செய்துள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட 210 பேர் சார்பாக நான் புகார் மனு அளித்துள்ளேன்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இதே போல் ஏராளமானோரை ஏமாற்றி, பல கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர்.
பண மோசடி செய்த ஆறு பேரும் அவர்களுக்குள்ளாகவே மாறி, மாறி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து நாடகமாடுகிறார்கள்.
இது குறித்து விசாரித்து பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் மூலம் விசாரணை நடத்தி, விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் செலுத்திய பணத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்நிலையில் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ங்களில் இன்று காலை 8 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சீனிவாசன், கிருஷ்ணகிரி மாவட்ட டி.எஸ்.பி. சிவகுமார், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் புகாருக்கு உள்ளான யுனிவர் காயின் நிறுவன ஏஜெண்டுகளின் வீடுகளில் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளியிலும், கிருஷ்ணகிரியில் ஓசூர், செட்டிபள்ளி, செரிகோணப்பள்ளி உள்பட 7 இடங்களிலும் இந்த சோதனை நடந்தது.
- கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஹெப்பகோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- வணக்கம் பெங்களூரு என்ற பெயரில் இங்கு டிக்கெட் விற்று, கலை நிகழ்ச்சிகள் நடத்தி பணம் சம்பாதிப்பது ஏற்க முடியாது.
ஓசூர்:
ஓசூர் அருகே கர்நாடக மாநில பகுதியான ஹெப்பகோடியில், ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் இன்று (ஞாயிற்றுகிழமை) மாலை, "வணக்கம் பெங்களூரு" என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஹெப்பகோடி காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்தனர்.
மேலும் இது குறித்து ஒரு பெண் நிர்வாகி, கர்நாடக மாநிலத்திற்கு தமிழர்கள் வருகின்றனர். சம்பாதித்து செட்டில் ஆகின்றனர். ஆனால் திரும்பி செல்லும் போது கர்நாடகத்தை திட்டி செல்கின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் இது போன்று நாங்கள் கன்னட நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிப்பார்களா? இவ்வாறு வேற்றுமை உணர்வுடன் செயல்படும் அவர்கள் , "வணக்கம் பெங்களூரு" என்ற பெயரில் இங்கு டிக்கெட் விற்று, கலை நிகழ்ச்சிகள் நடத்தி பணம் சம்பாதிப்பது ஏற்க முடியாது.
எனவே இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையெனில், அனைத்து கன்னட அமைப்புகளையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்து, போலீசில் மனு அளிக்க வந்துள்ளதாக ஆவேசமாக கூறினார்.
- ஓசூரில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் மாரே கவுடு தலைமை தாங்கினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க.சார்பில், ஓசூரில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் மாரே கவுடு தலைமை தாங்கினார்.
மாவட்ட அவைத்தலை வர் வக்கீல் அன்வர் பாஷா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநகர கிழக்கு பகுதி செயலாளர் சாய் கிரண் வரவேற்றார்.
இதில், முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், முன்னாள் எம்.எல்.ஏ.ரோகிணி கிருஷ்ண குமார், மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் தரணி சண்முகம், தலைமைக்கழக பேச்சாளர் திருப்பூர் சுரேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளைத்துரை, டி.எஸ்.பாண்டியன், பொருளாளர் சிவகுமார், தேவராஜ் மற்றும், மாவட்ட,, ஒன்றிய, மாநகர நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து தொண்டனர்.
முடிவில், மாநகர மேற்கு பகுதி செயலாளர் வீரைய்யா நன்றி கூறினார்.
- இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் வசந்தா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்ப முயன்றனர்.
- வசந்தா கூச்சலிடவே அப்பகுதியில் இருந்தவர்கள் நகை பறித்த வாலிபர்களில் ஒருவரை மடக்கினர். மற்றொருவர் தப்பிவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்னகிரி பவர் ஹவுஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி வசந்தா (வயது 62).இவர் எல்.ஐ.சி.ஏஜெண்டாக உள்ளார்.
இவர் கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் நடந்து சென்றபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் வசந்தா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்ப முயன்றனர்.
வசந்தா கூச்சலிடவே அப்பகுதியில் இருந்தவர்கள் நகை பறித்த வாலிபர்களில் ஒருவரை மடக்கினர். மற்றொருவர் தப்பிவிட்டார். பிடிபட்ட வாலிபரை கிருஷ்ணகிரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன் சத்திரத்தை சேர்ந்த முகமது இப்ராஹிம் அலி (18) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய அவரது கூட்டாளி மைதீன் (18) என்பவரை தேடி வருகின்றனர்.
- மழை நீர் செல்ல முடியாமல் தேங்கி நின்று, சுமார் 5,000 குடியிருப்புகளில் உள்ள மக்கள் கடும் அவதியை சந்தித்து வந்தனர்.
- ராஜ கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள், செடி, கொடிகள் அனைத்தும் ஜே.சி.பி. மற்றும் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு சுமார் 3 கி.மீ. தூரம் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஓசூர்,
ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளி தேசிங்கு நகர், ராஜாஜி நகர், எம். எம். நகர், ஸ்ரீ நகர் ஆகிய பகுதிகள் வழியாக பழமையான ராஜ கால்வாய் செல்கிறது.
இந்த ராஜ கால்வாய், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சுத்தம் செய்யப்படாமல் ஆக்கி ரமிப்புகளால் சூழப்பட்டு இருந்தது. இதனால் மழைக்காலங்களில் கால்வாய் வழியாக மழை நீர் செல்ல முடியாமல் தேங்கி நின்று, சுமார் 5,000 குடியிருப்புகளில் உள்ள மக்கள் கடும் அவதியை சந்தித்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஓசூர் மாநகராட்சி மூலம் ரூ.10 லட்சம் செலவில், 17-வது வார்டு கவுன்சிலர் நாகராஜ் முயற்சியின்பேரில் ராஜா கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கியது.
ராஜ கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள், செடி, கொடிகள் அனைத்தும் ஜே.சி.பி. மற்றும் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு சுமார் 3 கி.மீ. தூரம் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கால்வாய் சுத்தம் செய்யப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜ கால்வாய் சுத்தம் செய்யப்படுவதால் மழைக்காலங்களில் அதிகப்படியாக வரும் மழை நீர் எங்கும் தேங்காமல், கால்வாய் வழியாக அப்பகுதியில் உள்ள சந்திராம்பிகை ஏரிக்கு எளிதில் சென்று விடும்.
இதற்கான நடவடிக்கை களை மேற்கொண்ட ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் கவுன்சிலர் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.






