என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மகேந்திரன் என்பவர் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது.
    • அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மத்தூர் ,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள மாதம்பள்ளி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது மகேந்திரன் (வயது 40) என்பவர் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது.

    அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல ஜி.டி.குப்பம் பகுதியில் மல்லிகா (57) என்ற பெண் மதுபாட்டில்களை விற்று பிடிபட்டார்.

    அவரையும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தை பொதுமக்களுக்கு பட்டா பிரித்து அரசு சார்பில் வழங்கப்பட்டது.
    • ஆக்கிரமித்து கடை வைத்திருந்த அந்த நபர் தான் சார்ந்துள்ள கட்சியின் பெயரில் அங்கு ஒரு அலுவலகத்தை தொடங்கி விட்டார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாணித்தெரு நுழைவுவாயில் உள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான 90 சென்ட் நிலம் உள்ளது.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தை பொதுமக்களுக்கு பட்டா பிரித்து அரசு சார்பில் வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் அரசு உபயோகத்துக்கு தேவைப்பட்டதால் பொதுமக்களுக்கு இழப்பீடு கொடுத்து இந்த நிலம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அந்த நிலத்தின் ஒரு பகுதியில் பழைய இரும்பு கடை ஒன்று ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விசாரணை நடத்தி அந்த கடையை காலி செய்ய உத்தரவிட்டனர்.

    இதனால் ஆக்கிரமித்து கடை வைத்திருந்த அந்த நபர் தான் சார்ந்துள்ள கட்சியின் பெயரில் அங்கு ஒரு அலுவலகத்தை தொடங்கி விட்டார்.

    இன்றுகாலை ஆக்கிரமிப்பு அகற்ற ேஜ.சி.பி. எந்திரம், தீயணைப்பு துறை வாகனத்துடன் ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, சூளகிரி தாசில்தார் அனிதா, இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் அங்கு வந்தனர்.

    அப்போது ஆக்கிரமிப்பு செய்துள்ளவருக்கு ஆதரவாக அவர் சார்ந்த கட்சியின் நிர்வாகிகளும் அங்கு திரண்டனர். அவர்கள் அதிகாரிகள் -போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • தோட்டத்தில் விவசாய பணிகளுக்காக ரூ. 38 ஆயிரம் மதிப்பிலான குழாய்களை வாங்கி வைத்திருந்துள்ளார்.
    • போலீசார் பழனியை கைது செய்தனர்.மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகேயுள்ள புதூர் புங்கனை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 24). இவர் தனது தோட்டத்தில் விவசாய பணிகளுக்காக ரூ. 38 ஆயிரம் மதிப்பிலான குழாய்களை வாங்கி வைத்திருந்துள்ளார்.

    இந்நிலையில் அவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து பிரபாகரன் கல்லாவி போலீசில் புகார் செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில் பிரபாகரனின் தோட்டத்தில் புகுந்து கைவரிசை காட்டியது சிங்கார பேட்டை அருகே யுள்ள நாயக்கன்பட்டியை சேர்ந்த பழனி (43), புங்கனை பகுதியை சேர்ந்த கோகுல் (20),சுவேதன் (20), விஜயராகவன் (20) ஆகியோர்தான் என்பது தெரிய வந்தது.

    அவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் பழனியை கைது செய்தனர்.மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட 178 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 793 லட்சம் மதிப்பிலான 62 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம்தோறும் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் அரிசியை, ஒரு கிலோ 75 என கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதனை புரோக்கர்கள் வீடு, வீடாக சென்று வாங்கி, அதை மொத்தமாக கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கு லாரி, மினி லாரி, ஆட்டோ, இருசக்கர வாகனம் போன்றவற்றில் கடத்தி செல்கின்றனர்.

    அங்குள்ள அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசியை சன்ன ரகமாக மாற்றி, பாலீஷ் செய்து, அதை நவீன எந்திரங்களை கொண்டு பேக் செய்து, ஒரு கிலோ 740 முதல் 750 வரை ஓட்டல்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

    மேலும், அதே அரிசியை தமிழகத்திற்கும் அனுப்பி, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து, கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கு அதிக அளவில் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆந்திராவிற்கு அதிக அளவில் அரிசி கடத்தல் நடப்பதாக வும், அதை தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    இதையடுத்து, அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஆபாஸ் குமாருக்கு, முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

    உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி பாலாஜி மேற்பார்வையில், டிஎஸ்பி விஜயகுமார், கிருஷ்ணகிரி பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், எஸ்.ஐ கலைச்செல்வன் ஆகியோர் தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான வரமலை குண்டா, காளிக்கோவில், வேப்பனஹள்ளி, பேரிகை, பாகலூர், ஜூஜூவாடி, அத்திப்பள்ளி, டி.வி.எஸ் உள்ளிட்ட பகுதிகளில் `உள்ள நிரந்தர சோதனை சாவடிகளில் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.

    கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 8 மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கு கடத்த இருந்த 20.50 லட்சம் மதிப்பிலான 363 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட 178 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 793 லட்சம் மதிப்பிலான 62 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த 4 பேரை, குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 94 வாகனங்களை 744 லட்சத்து 13 ஆயிரத்திற்கு பொது ஏலம் விடப்பட்டு, அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

    ரேஷன் அரிசியை சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீதும், அதை வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் எச்சரித்துள்ளனர்.

    • மகராஜகடை போலீஸ்இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் போகனப்பள்ளி -பூசாரிப்பட்டி சாலையில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பகுதியில் குட்கா கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மேற்பார்வையில், மகராஜகடை போலீஸ்இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் போகனப்பள்ளி -பூசாரிப்பட்டி சாலையில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஸ்கூட்டரில், 10 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவர் கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த ஜிகேந்திர படேல் (வயது 24) என்பதும், வட மாநிலத்தைச் சேர்ந்த அவர் கிருஷ்ணகிரி நகரில் கடை வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    மேலும் போகனப்பள்ளி சுடுகாடு அருகே உள்ள குடோனில் இருந்து குட்காவை பதுக்கி வைத்து, அவ்வப்போது கடைக்கு புகையிலை பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து மகராஜகடை போலீசார் ஜிகேந்திரபடேல் கூறிய குடோனுக்கு சென்று அதிரடி சோதனையிட்டனர். அதில் குடோனில் 340 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மொத்தம் 350 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த மகராஜகடை போலீசார் ஜிகேந்திர பட்டேலை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • சாமல்பட்டி அருகே பாம்பு கடித்து பெண் ஒருவர் பலியானார்.
    • நேற்று தங்களது நிலத்தில் மஞ்சுளா வயல் வேலைக்கு சென்றுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகேயுள்ள சின்னனூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 37).

    நேற்று தங்களது நிலத்தில் மஞ்சுளா வயல் வேலைக்கு சென்றுள்ளார்.அப்போது அவரை பாம்பு கடித்து விட்டதாக கூறப்படுகிறது.

    வாயில் நுரை தள்ளி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் மஞ்சுளாவை பார்த்து அவரை மீட்டு மத்தூர் ராசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மஞ்சுளா உயிரிழந்து விட்டார்.

    இது குறித்து பார்த்திபன் தந்த புகாரின்பேரில் சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்று பார்த்ததில் டிப்பர் லாரியில் 4 யூனிட் செம்மண் கடத்தியது தெரியவந்தது.
    • டிப்பர் லாரியின் ஓட்டுநர் கமலநாதனை கைது செய்ததுடன், செம்மண்ணுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள பாவக்கல் பகுதியை சேர்ந்தவர் சரவணன். டிப்பர் லாரியின் உரிமையாளரான இவரும், அதே பகுதியை சேர்ந்த டிப்பர் லாரியின் ஓட்டுனரான கமலநாதன் ஆகிய இருவரும் சிங்காரப்பேட்டை அருகே உள்ள மல்லிப்பட்டி ஏரியில் அரசு அனுமதியின்றி செம்மண் கடத்தி வருவதாக சிங்காரப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்று பார்த்ததில் டிப்பர் லாரியில் 4 யூனிட் செம்மண் கடத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து டிப்பர் லாரியின் ஓட்டுநர் கமலநாதனை கைது செய்ததுடன், செம்மண்ணுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். அங்கிருந்து தப்பியோடிய டிப்பர் லாரியின் உரிமையாளர் சரவணன் மீது சிங்காரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

    • சுதர்சன் நேற்று பக்கத்து வெளிப்பகுதியில் உள்ள திறந்தவெளி தண்ணீர் தொட்டி அருகே விலகி கொண்டிருந்துள்ளான்.
    • குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை தொடர்ந்து அவரது உறவினர்கள் குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச்சென்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த சத்யராஜ், அகிலா தம்பதியினரின் 2 வயது குழந்தையான சுதர்சன் நேற்று பக்கத்து வெளிப்பகுதியில் உள்ள திறந்தவெளி தண்ணீர் தொட்டி அருகே விலகி கொண்டிருந்துள்ளான்.

    எதிர்பாராத விதமாக குழந்தை சுதர்சன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிருக்கு போராடி வந்த நிலையில் அப்பகுதி வழியாக வந்தவர்கள் இதைப்பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்தனர்.

    குழந்தையை அங்கிருந்து மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகி ச்சைக்காக அனுமதித்தனர்.

    குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை தொடர்ந்து அவரது உறவினர்கள் குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச்சென்றனர்.

    இதனால் மருத்துவமனை வளாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பின் தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    • பாரதியார் தின பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையேயான கைப்பந்து மற்றும் கேரம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
    • உங்கட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஓசூர்,

    ஓசூரில், வடக்கு சரக அளவிலான 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான குடியரசு தின மற்றும் பாரதியார் தின பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையேயான கைப்பந்து மற்றும் கேரம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில், 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

    ஓசூர் - பாகலூர் சாலையில் சென்ன சந்திரம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நேற்று நடைபெற்ற இந்த போட்டிகளை ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் முனிராஜ் மற்றும் பள்ளி ஆய்வாளர் பிரபாவதி, உங்கட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    போட்டியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அணிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கு பெற்று விளையாடினர். முடிவில், 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் புக்க சாகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடத்தை யும் 17 , 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பாகலூர் முதலிடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.

    பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட கிரீன்வேலி பள்ளியின் தாளாளர் சுந்தரம், முதன்மை நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் பிரசாத், பள்ளியின் முதல்வர் சந்திரசேகர், ஓசூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கஜேந்திரமூர்த்தி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ். மாது, சுரேஷ்குமார், ரோஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
    • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி, 8-வது இடத்தை பிடித்து சாதனை புரிந்தனர்.

    ஓசூர்,

    தமிழ்நாடு கைப்பந்து கழகம் சார்பில் 70-வது ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், 76 அணிகள் கலந்து கொண்டன.

    இந்த போட்டியில், ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி, 8-வது இடத்தை பிடித்து சாதனை புரிந்தனர்.

    இதனைத்தொடர்ந்து, ஓசூரில் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதனை புரிந்த மாணவிகளுக்கு தலைமையாசிரியை லதா, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, உடற்கல்வி ஆசிரியர் முருகேஸ்வரி, பயிற்சியாளர்கள் தாயுமானவன், மாணிக்கவாசகம், ராமமூர்த்தி மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரிய ஆசிரியையர் கலந்து கொண்டனர்.

    • 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பிணமாக கிடப்பதாக புகார் கொடுத்தார்.
    • மூதாட்டியின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பிண அறைக்கு அனுப்பிவைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள மாறப்பநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சதாசிவம் (வயது 32) என்பவர் திருப்பத்தூர்-தருமபுரி சாலையில் உள்ள பனங்காட்டு பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பிணமாக கிடப்பதாக புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பிண அறைக்கு அனுப்பிவைத்தனர்.

    இறந்து கிடந்தவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர்?எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×