என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் அரிசி கடத்திய 178 பேர் கைது"

    • அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட 178 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 793 லட்சம் மதிப்பிலான 62 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம்தோறும் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் அரிசியை, ஒரு கிலோ 75 என கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதனை புரோக்கர்கள் வீடு, வீடாக சென்று வாங்கி, அதை மொத்தமாக கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கு லாரி, மினி லாரி, ஆட்டோ, இருசக்கர வாகனம் போன்றவற்றில் கடத்தி செல்கின்றனர்.

    அங்குள்ள அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசியை சன்ன ரகமாக மாற்றி, பாலீஷ் செய்து, அதை நவீன எந்திரங்களை கொண்டு பேக் செய்து, ஒரு கிலோ 740 முதல் 750 வரை ஓட்டல்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

    மேலும், அதே அரிசியை தமிழகத்திற்கும் அனுப்பி, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து, கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கு அதிக அளவில் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆந்திராவிற்கு அதிக அளவில் அரிசி கடத்தல் நடப்பதாக வும், அதை தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    இதையடுத்து, அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஆபாஸ் குமாருக்கு, முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

    உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி பாலாஜி மேற்பார்வையில், டிஎஸ்பி விஜயகுமார், கிருஷ்ணகிரி பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், எஸ்.ஐ கலைச்செல்வன் ஆகியோர் தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான வரமலை குண்டா, காளிக்கோவில், வேப்பனஹள்ளி, பேரிகை, பாகலூர், ஜூஜூவாடி, அத்திப்பள்ளி, டி.வி.எஸ் உள்ளிட்ட பகுதிகளில் `உள்ள நிரந்தர சோதனை சாவடிகளில் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.

    கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 8 மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கு கடத்த இருந்த 20.50 லட்சம் மதிப்பிலான 363 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட 178 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 793 லட்சம் மதிப்பிலான 62 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த 4 பேரை, குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 94 வாகனங்களை 744 லட்சத்து 13 ஆயிரத்திற்கு பொது ஏலம் விடப்பட்டு, அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

    ரேஷன் அரிசியை சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீதும், அதை வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் எச்சரித்துள்ளனர்.

    ×