என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிங்காரப்பேட்டை அருகே அனுமதியின்றி செம்மண் கடத்தியவர் கைது
- அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்று பார்த்ததில் டிப்பர் லாரியில் 4 யூனிட் செம்மண் கடத்தியது தெரியவந்தது.
- டிப்பர் லாரியின் ஓட்டுநர் கமலநாதனை கைது செய்ததுடன், செம்மண்ணுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள பாவக்கல் பகுதியை சேர்ந்தவர் சரவணன். டிப்பர் லாரியின் உரிமையாளரான இவரும், அதே பகுதியை சேர்ந்த டிப்பர் லாரியின் ஓட்டுனரான கமலநாதன் ஆகிய இருவரும் சிங்காரப்பேட்டை அருகே உள்ள மல்லிப்பட்டி ஏரியில் அரசு அனுமதியின்றி செம்மண் கடத்தி வருவதாக சிங்காரப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்று பார்த்ததில் டிப்பர் லாரியில் 4 யூனிட் செம்மண் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து டிப்பர் லாரியின் ஓட்டுநர் கமலநாதனை கைது செய்ததுடன், செம்மண்ணுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். அங்கிருந்து தப்பியோடிய டிப்பர் லாரியின் உரிமையாளர் சரவணன் மீது சிங்காரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
Next Story






