என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைப்பந்து-கேரம் விளையாட்டுப்போட்டிகள்"

    • பாரதியார் தின பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையேயான கைப்பந்து மற்றும் கேரம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
    • உங்கட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஓசூர்,

    ஓசூரில், வடக்கு சரக அளவிலான 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான குடியரசு தின மற்றும் பாரதியார் தின பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையேயான கைப்பந்து மற்றும் கேரம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில், 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

    ஓசூர் - பாகலூர் சாலையில் சென்ன சந்திரம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நேற்று நடைபெற்ற இந்த போட்டிகளை ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் முனிராஜ் மற்றும் பள்ளி ஆய்வாளர் பிரபாவதி, உங்கட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    போட்டியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அணிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கு பெற்று விளையாடினர். முடிவில், 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் புக்க சாகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடத்தை யும் 17 , 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பாகலூர் முதலிடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.

    பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட கிரீன்வேலி பள்ளியின் தாளாளர் சுந்தரம், முதன்மை நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் பிரசாத், பள்ளியின் முதல்வர் சந்திரசேகர், ஓசூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கஜேந்திரமூர்த்தி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ். மாது, சுரேஷ்குமார், ரோஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×