என் மலர்
உள்ளூர் செய்திகள்

இறந்த குழந்தை.
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலியான பரிதாபம்
- சுதர்சன் நேற்று பக்கத்து வெளிப்பகுதியில் உள்ள திறந்தவெளி தண்ணீர் தொட்டி அருகே விலகி கொண்டிருந்துள்ளான்.
- குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை தொடர்ந்து அவரது உறவினர்கள் குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச்சென்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த சத்யராஜ், அகிலா தம்பதியினரின் 2 வயது குழந்தையான சுதர்சன் நேற்று பக்கத்து வெளிப்பகுதியில் உள்ள திறந்தவெளி தண்ணீர் தொட்டி அருகே விலகி கொண்டிருந்துள்ளான்.
எதிர்பாராத விதமாக குழந்தை சுதர்சன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிருக்கு போராடி வந்த நிலையில் அப்பகுதி வழியாக வந்தவர்கள் இதைப்பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்தனர்.
குழந்தையை அங்கிருந்து மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகி ச்சைக்காக அனுமதித்தனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை தொடர்ந்து அவரது உறவினர்கள் குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச்சென்றனர்.
இதனால் மருத்துவமனை வளாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பின் தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.






