என் மலர்
கிருஷ்ணகிரி
- கிராம அளவிலான சமூக காய்கறி தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்க வேண்டும்.
- பெண்களின் முன்னேற்றத்தில் சிறப்பான மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டசத்து மாத விழா நடந்தது.
இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெய சந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார்.இதில், ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழியை அங்கன்வாடி பணியா ளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
மேலும், வட்டார அளவில் வளரிளம் பெண்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறித்து பொதுமக்களிடையே நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை கலெக்டர் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஊட்டச்சத்து குறித்து தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்ப டுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து கிராமங்கள், நகரங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறிந்து கவனிக்கவும், வீட்டுத் தோட்டம் அமைக்க ஊக்கம் அளிக்கப்படுகிறது. இதே போல், கிராம அளவிலான சமூக காய்கறி தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்க வேண்டும்.
மேலும், மருத்துவ குழு மூலம் 3மாதத்திற்கு ஒருமுறை மையக் குழந்தைகளுக்கு மருத்துவ ஆய்வு செய்ய வேண்டும். மிகவும் பலவீனமான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். மேலும், அங்கன்வாடி பணியாளர்களும், கிராமங்களில் உள்ள சுகாதார பணியாளர்கள் இணைந்து வீடு வீடாக சென்று பொதுமக்கள், கர்ப்பிணி தாய்மார்கள், வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த 3மாதங்களாக நமது மாவட்டத்தில் தாய்சேய் இறப்பு ஏதுமில்லை.
மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் குழந்தை திருமணத்தை தடுத்து, பெண் கல்வியை ஊக்குவித்து, பெண்களின் முன்னேற்றத்தில் சிறப்பான மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குழந்தை திருமணம் வெகுவாக குறைந்துள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக சிறு தானியங்கள், பழ வகைகள், கீரை வகைகள், பிறந்த குழந்தைகள் முதல் 6வயது குழந்தைகள் வரை, கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டசத்து உணவு உண்பது குறித்து உள்ளுரில் கிடைக்கூடிய உணவு வகைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் ஜெயந்தி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.கோவிந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட அலுவலர் சிவகாந்தி, வட்டாட்சியர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் பிரபாகர், பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன், புள்ளியியல் ஆய்வாளர் சீனிவாசன், மாவட்ட பசுமை திட்ட ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில், கெலமங்கலம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி நன்றி கூறினார்.
- பொதுமக்களிடம் பேசுவது போல அவர்களின் மனதை திசை திருப்பி அவர்களிடம் இருக்கும் பணம், கைபேசி, தங்க நகை போன்றவற்றை பெண் மோசடி செய்துள்ளார்.
- அந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரத்தை பறிமுதல் செய்து, ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களிடம் பேசுவது போல அவர்களின் மனதை திசை திருப்பி அவர்களிடம் இருக்கும் பணம், கைபேசி, தங்க நகை போன்றவற்றை கொள்ளையடித்து வந்த பெண் ஒருவர் மீது ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து ஊத்தங்கரை டி.எஸ்.பி. அமலா அட்வின் உத்தரவின்பேரில் தேடப்பட்டு வந்த அந்த பெண் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த நந்தினி (வயது 29) என்பது தெரியவந்தது.
இதை அடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரத்தை பறிமுதல் செய்து, ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- அந்த வழியாக வந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- கைதான அவரிடம் இருந்து 5 லிட்டம் சாராயம் பறிமுதல் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள மகனூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது83). இவர் விசுவாசம்பட்டி பாலம் அருகில் இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து 5 லிட்டம் சாராயம் பறிமுதல் செய்தனர்.
கைதான அவரை ேகார்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
- ஆன்லைன் மூலம் ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார்.
- சந்தேகம் அடைந்த சிவசங்கர் கிருஷ்ணகிரி சைபர் போலீசில் புகார் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி செந்தில்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது43). இவர் பத்திர பதிவு எழுத்தர் அலுவலகம் நடத்தி வருகிறார். கடந்த 10-ந்தேதி அன்று அவருக்கு செல்போன் மூலம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் பேப்பர் குறைந்த விலைக்கு தருவதாக கூறினர். இதனை நம்பிய ஆன்லைன் மூலம் ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் பேப்பர் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிவசங்கர் கிருஷ்ணகிரி சைபர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதே போல் ஓசூர் பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (24). இவருக்கு வெளிநாட்டில் ேவலை வாங்கி தருவதாக போன் வந்தது. அதனால் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். பின்னர் ஏமாற்றம் அடைந்த அவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி விசாரணை நடத்தி வருகிறார்.
- 110 இடங்களில் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது.
- பொதுமக்களுக்கும் நிலவேம்பு, கபசுர குடிநீர், விட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் 10 ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி பகுதிகள் மற்றும் அரசு பள்ளிகளில் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் நடந்தது. கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவையால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாவட்ட முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்ங்கள், ஊராட்சிகளில் ஒருங்கி ணைந்த தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர். கோவிந்தன் கூறுகையில், மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, மத்தூர், வேப்பனப்பள்ளி, சூளகிரி, ஓசூர், கெலமங்கலம், காவேரிப்பட்டணம், தளி ஆகிய 10 ஒன்றியங்களில் நேற்று 110 இடங்களில் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. அரசு பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, காய்ச்சல், சளி, இருமல், தலைவலி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிலவேம்பு, கபசுர குடிநீர், விட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டன.
அத்துடன் ஊராட்சி நிர்வாகத்துடன், கிராம பகுதிகளில் ஒருங்கிணைந்த தூய்மை பணிகளும், கொசு, கொசு புழுக்கள் ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பாதிப்பு சிலருக்கு உள்ளது. காய்ச்சல், சளி, இருமல், தலைவலி பாதிப்பு உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு சிகிச்சை பெறலாம்.
யாரும் அச்சப்பட தேவையில்லை. ஒவ்வொரு நாளும் மருத்துவ குழுவினர் 4 இடங்களில் முகாம் நடத்தி பரிசோதனைகள் மேற்கொண்டு வரு கின்றனர். மாவட்டத்தில் 11 நடமாடும் மருத்துவ குழுவினரும், 20 குழந்தைக ளுக்கான சிறப்பு குழுவும் அமைக்க ப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கடந்த சில மாதங்களாக சரியான வியாபாரம் இல்லாமல் சுசிலா பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.
- சுசிலா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் அருகேயுள்ள நல்லூர் பொத்த எலத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சுசிலா (வயது 50). இவர் அப்பகுதியில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வந்தார்.
கடந்த சில மாதங்களாக சரியான வியாபாரம் இல்லாமல் சுசிலா பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.
இந்த நெருக்கடியாலும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தாலும் சுசிலா மனமுடைந்து இருந்து வந்தார்.
இந்நிலையில் சுசிலா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் தந்த தகவலின்பேரில் ஓசூர் போலீசார் விரைந்து வந்து சுசிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்.
அவரது தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தின் பகுதிகள் மற்றும் கர்நாடகாவிற்கு கொத்தமல்லி அனுப்பப்படுகிறது.
- கொத்தமல்லி 45 நாள் பயிர் என்பதால் விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரிமாவட்டம், ஓசூர், தேன்கனிக் சூளகிரி, கோட்டை சுற்று வட்டாரத்தில், 3,000 ஏக்கருக்கு மேல், ஆண்டு முழுவதும் கொத்தமல்லி சாகுபடி நடக்கிறது.
இதை மையமாக சூளகிரியில் பெரிய கொத்தமல்லி மார்க்கெட் இயங்குகிறது. இங்கிருந்து, தமிழகத்தின் பகுதிகள் மற்றும் கர்நாடகாவிற்கு கொத்தமல்லி அனுப்பப்படுகிறது.
கொத்தமல்லி 45 நாள் பயிர் என்பதால் விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர்.மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் கொத்தமல்லி தோட்டத்திற்குள் தண்ணீர் தேங்கி செடி அழுகியது. இதனால் சந்தைக்கு வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்துள்ளது.
ஓசூர் உழவர் சந்தையில் கடந்த, 10 நாட்களுக்கு முன், 150 முதல், 200 கிராம் கொண்ட ஒரு கட்டு கொத்தமல்லி, 30 ரூபாய் என விற்றது, நேற்று, 70 முதல், 80 ரூபாய் என விற்பனையானது.
காய்கறிகள் வாங்கினால், கொத்தமல்லியை கொடுத்து வந்த கடைக்காரர்கள், தற்போது விலை உயர்வால் கொடுப்பதை நிறுத்தி விட்டனர்.
இதேபோல தருமபுரி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் ஓசூர், தளி, கெலமங்கலம், சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக குறுகிய காலத்தில் அதிகளவில் லாபம் தரும் தோட்டப்பயிர்களான கொத்தமல்லி, புதினா உள்ளிட்ட தோட்டப் பயிர்களை விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர்.
இங்கு விளையும் தரமான மற்றும் வாசம் மிகுந்த கொத்தமல்லி சென்னை, மதுரை கோவை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் தினசரி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் இங்கு விளையும் கொத்தமல்லிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட கொத்தமல்லி தொடர் மழையால் அழுகி வீணாகி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
அதனால், கொத்தமல்லியின் விலை கிடுகிடுவென உயர்ந்து மூன்று நாட்களுக்கு முன்பு கட்டு கொத்தமல்லி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்தாது. தற்போது தருமபுரி காய்கறி மார்க்கெட்டில் கட்டு 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- குடும்ப விவகாரம் தொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- ஆத்திரம் அடைந்த முபாரக் அருகே கிடந்த செங்கல்லை எடுத்து ரியாஸ் பாஷாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன பள்ளி மஜீத் தெருவை சேர்ந்தவர் ரியாஸ் பாஷா (வயது 48).கூலி தொழிலாளி. இவரது உறவினர் முபாரக் (30). டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது குடும்ப விவகாரம் தொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த முபாரக் அருகே கிடந்த செங்கல்லை எடுத்து ரியாஸ் பாஷாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த ரியாஸ் பாஷா வேப்பன பள்ளி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் குறித்து வேப்பன பள்ளி போலீசில் ரியாஸ் பாஷா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து டிரைவர் முபாரக்கை கைது செய்தனர்.
- போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர்.
- சிவகுமார் (வயது 38), குமார் (42), கோவிந்தராஜ் (34) ஆகிய அந்த 3 பேரும் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள கொத்தக்கொட்டை பகுதியில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் சிவகுமார் (வயது 38), குமார் (42), கோவிந்தராஜ் (34) ஆகிய அந்த 3 பேரும் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நேற்றும் இதேபோல வேல்முருகன் போதையில் வந்துள்ளார்.
- அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் அருகே கிடந்த கத்தியை எடுத்து விக்னேஷின் வயிற்றில் குத்திவிட்டார்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் அருகேயுள்ள வி.ஓ.சி. நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 53). இவரது மகன் விக்னேஷ் (29).
குடிப்பழக்கத்துக்கு அடிமையான வேல்முருகன் தினசரி போதையில் வந்து வீட்டில் ரகளை செய்வாராம்.
நேற்றும் இதேபோல வேல்முருகன் போதையில் வந்துள்ளார். அப்போது தினமும் இவ்வாறு போதையில் வந்து வீட்டில் தகராறு செய்வது குறித்து அவரது மகன் விக்னேஷ் கண்டித்துள்ளார்.
அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் அருகே கிடந்த கத்தியை எடுத்து விக்னேஷின் வயிற்றில் குத்திவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்து ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ள விக்னேஷ் தந்த புகாரின் பேரில் ஓசூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.
- ஓசூர் நாமால்பேட்டை பகுதியில் உள்ளி குடோன்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
- ஒன்றரை டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் மற்றும் பைகள்,டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் ,அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் குவிந்தன.
இதன் அடிப்படையில், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், மாநகராட்சியின் நகர் நல அலுவலர் அஜிதா தலைமையில், மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள், ஓசூர் நாமால்பேட்டை பகுதியில் உள்ளி குடோன்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் மற்றும் பைகள்,டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ 5 லட்சத்திற்கும் மேல் என்று கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், ஓசூர் ஆனந்த நகர் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு கொண்டு சென்று துண்டு,துண்டுகளாக வெட்டி அழிக்கப்பட்டன.
மேலும் இதனை பதுக்கி வைத்திருந்த 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.39,000 அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை விடப்பட்டது.
- கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் செங்கல், சிமெண்ட் கலவை தரம் குறித்து ஆய்வு செய்தார்.
- கண்ணன்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட, கூச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.4 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டடங்களின் கட்டமான பணிகளை ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் 2022-23் ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கே.எஸ். கோவிந்தசெட்டி தெரு முதல் ஐயப்பன் கோயில் வரை ரூ.ஒரு கோடியே 47 லட்சம் மதிப்பில் பவர் பிளக் சாலை அமைக்கும் பணி, ரூ.ஒரு கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, கணேஷ் நகர் மற்றும் நேரலகோட்டை முதல் கோதியலகனூர் வரை தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.ஒரு கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், மத்தூர் ஊராட்சி ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் செங்கல், சிமெண்ட் கலவை தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், கொத்தகோட்டை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் விவசாயி ஞானவேல் என்பவரது மாந்தோட்டத்தில் ரூ.ஒரு லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் மழைநீர் சேகரிக்கும் பொருட்டு சம உயர வரப்புகள், நீர் உறிஞ்சு குழிகள் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியார்களிடம் பணிகளின் விபரம் குறித்தும், பணி செய்த நாட்களுக்கு ஊதியம் சரியாக வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.
கண்ணன்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட, கூச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.4 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டடங்களின் கட்டமான பணிகளை ஆய்வு செய்து, பள்ளி மாணவர்களின் வருகை குறித்தும், ஆசிரியர்களின் வருகை குறித்தும் தலைமையாசிரியரிடம் கேட்டறிந்தார். அதன்படி, நேற்று பர்கூர் பேரூராட்சி மற்றும் மத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் ரூ.5 கோடியே 4 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் நடந்து வரும் அரசு நலத்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவாக வழங்க பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் களுக்கு உத்தரவிட்டார்.






