என் மலர்
கிருஷ்ணகிரி
- போலீசார் வருவதை அறிந்த அவர்கள் உடனே சீட்டு கட்டுகளை போட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
- போலீசார் விரட்டி சென்று 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள வேலம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டவர்களை பார்த்தனர். போலீசார் வருவதை அறிந்த அவர்கள் உடனே சீட்டு கட்டுகளை போட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
போலீசார் விரட்டி சென்று 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மாதப்பன் மகன் தீபக் (வயது23), கவரன் மகன் சரவணன் (28), சரவணன் மகன் விஷ்ணு (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்து அவர்களிடம் இருந்து பணம், சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- 2 மாதத்திற்கு முன்பு அலுவலகத்தில் அதிகாலை அலுவலகத்தில் பணியாற்றியவர்களை அறையில் அடைத்து வைத்து பல லட்சம் மதிக்கதக்க மின் உபகரணங்களை கொள்ளையர்கள் எடுத்து சென்றனர்.
- 2 மாதங்களுக்கு பின்பு வழக்கில் உள்ள 16-வது கொள்ளையன் கெலமங்கலத்தை சேர்ந்த முனியய்யா மகன் செல்வ ராஜ் (வயது21) என்பவரை பேரிகை போலீசார் கைது செய்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா பேரிகை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான மின் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் 2 மாதத்திற்கு முன்பு அலுவலகத்தில் அதிகாலை அலுவலகத்தில் பணியாற்றியவர்களை அறையில் அடைத்து வைத்து பல லட்சம் மதிக்கதக்க மின் உபகரணங்களை கொள்ளையர்கள் எடுத்து சென்றனர். இதை அறிந்த மின்பொறி யாளர் பேரிகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து தேடிவந்தநிலையில் 15 கொள்ளையர்களை பிடித்து சிறையில் அடைத்தனர்.
2 மாதங்களுக்கு பின்பு வழக்கில் உள்ள 16-வது கொள்ளையன் கெலமங்கலத்தை சேர்ந்த முனியய்யா மகன் செல்வ ராஜ் (வயது21) என்பவரை பேரிகை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள்எவ்வித சிரமம்மின்றி சிகிச்சை பெற ஏதுவாக இருக்கும் என பேசினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வட்டார சுகாதார பேரவையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி பேசியது, மத்தூர் ஒன்றியத்தில் உள்ள மத்தூர், சிவம்பட்டி, கொட மாண்டப்பட்டி, சாமல்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் எவ்வித வசதி வசதியின்றியும் தனியார் கட்டிடங்களில் இயங்குவதால் அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடங்களை கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நோயாளிகள் மற்றும் கர்பினிகள் எவ்வித சிரமம்மின்றி சிகிச்சை பெற ஏதுவாக இருக்கும் என பேசினார்.
அதே போல் மத்தூர் அரசு மருத்துவமனையில் அதிகளவில் உள்நோயா ளிகளாக நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருவதால் புதியதாக கூடுதல் கட்டிடங்கள் கட்டி அதிக படுக்கை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் அகிலா இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் கோரிக்கை வைத்து பேசினார். இதில் மக்களுக்கு தேவையான மருத்துவம் சார்ந்த நிறை குறை பேசப்பட்டது.
நிகழ்ச்சியில் மத்தூர் ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி (வ.ஊ), முருகன், (கி.ஊ) மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கர், மத்தூர் தொடக்க கல்வி அலுவலர் நாசர், சிவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் மனோகரன், அந்தேரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரவர்த்தி, கொடமாண் டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி சுந்தரவடிவேல், சாமல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேனி வெங்கடேசன், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா ராமன், ஒட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ், ஆனந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பவித்ரா சிலம்பரசன், கவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் பூபதி உள்ளிட்ட மத்தூர் ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சி மன்ற தலைவர்கள் மருத்துவம் சார்ந்த பேரவை விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டையிலிருந்து தொட்டி நாய்க்கனஅள்ளி நோக்கி நேற்று மாலை சாலையில் சென்றனர்.
- வேன் குட்டூர் பிரிவு பாதை அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த கொப்பகரை ஊராட்சி தொட்டி நாய்க்கனஅள்ளியை சேர்ந்த சின்னப்பன் மகன் மூர்த்தி (வயது 21). அதே ஊரை சேர்ந்த அரிசந்திரன் மகன் அரிகிருஷ்ணன் (19).
இவர்கள் இருவரும் மூர்த்தியின் மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டையிலிருந்து தொட்டி நாய்க்கனஅள்ளி நோக்கி நேற்று மாலை சாலையில் சென்றனர். அப்போது உலகம் கிராமத்திலிருந்து பால் ஏற்றிக்கொண்டு ராயக்கோட்டை நோக்கி வந்த வேன் குட்டூர் பிரிவு பாதை அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மூர்த்தி சம்பவ இடத்திலே பலியானார். பின்னால் உட்கார்ந்து வந்த அரிகிருஷ்ணன் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளார்.
இது தொடர்பாக சின்னப்பன் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குபதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரனை செய்து வருகிறார்.
- கடந்த 21-ந்தேதி போதையில் தள்ளாடியபடி சென்ற குமார் அதே பகுதியில் உள்ள பூசாரிக்கவுண்டனூர் ஏரியில் தவறி விழுந்துள்ளார்.
- இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகேயுள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 30). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.
கடந்த 21-ந்தேதி போதையில் தள்ளாடியபடி சென்ற குமார் அதே பகுதியில் உள்ள பூசாரிக்கவுண்டனூர் ஏரியில் தவறி விழுந்துள்ளார்.
சுய நினைவு இல்லாத நிலையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து குமாரின் மனைவி மீனாட்சி சிங்காரப்பேட்டை போலீசில் புகார் தந்தார்.
புகாரின்பேரில் போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிகிச்சை பெற்று வந்த ராமசாமி கடந்த 13-ந்தேதியன்று மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
- அதன்பிறகு அவர் மருத்துவ மனைக்கு திரும்பவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள பாலேபள்ளி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 25).
இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமசாமி கடந்த 13-ந்தேதியன்று மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் மருத்துவ மனைக்கு திரும்பவில்லை.
இது குறித்து ராமசாமியின் உறவினர் ராதா என்பவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் தந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு செய்து மாயமான ராமசாமியை தேடி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக உடல்நல பாதிப்பால் சுகன்யா தவித்து வந்துள்ளார்.
- மயங்கி கிடந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள எலச்சூரை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 28). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா (25).
கடந்த சில நாட்களாக உடல்நல பாதிப்பால் சுகன்யா தவித்து வந்துள்ளார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதில் மனமுடைந்த சுகன்யா கடந்த 20-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி கிடந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து பூங்காவனம் தந்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஸ்டாண்ட் பகுதியில் 40 வயது ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
- இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலைய பகுதி கிராம நிர்வாக அதிகாரி சரவணன் என்பவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 40 வயது ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று மர்ம நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- பர்கூர் சரக அளவிலான விளையாட்டு போட்டி அஞ்சூர்- ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
- 48 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சரக அளவிலான விளையாட்டு போட்டி அஞ்சூர்- ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இந்த போட்டிகளில் பருகூர் சரக அளவில் உள்ள 48 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் சூலாமலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட 3 ஆயிரம் மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்ட பந்தயங்களில் ஆண்கள் பிரிவில் இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சச்சின்குமார் என்பவர் முதலிடமும், பெண்கள் பிரிவில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஐஸ்வர்யா இரண்டாம் இடமும், பத்தாம் வகுப்பு படிக்கும் மதுமிதா மூன்றாம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர் மேலும் 14 வயதுக்குட்பட்ட 600 மீட்டர் ஓட்டப்பந்தய பெண்கள் பிரிவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஷாலினி மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
இந்த சாதனை படைத்து, பள்ளிக்கு பெருமை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சூலாமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பத்மப்ரியா தலைமை வகித்து, சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் பரத்குமார், கனிமொழி, பப்பில்லா ஆரோக்கியமேரி, விஜயலட்சுமி, சபிதா தனலட்சுமி மற்றும் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
- அறம் இலக்கிய அமைப்பின் செயலாளர் ராசு வரவேற்றார்.
- ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2 விழாவிற்கு, ஓசூர் முன்னாள் எம்.எல்ஏ.வும், தமிழ் வளர்ச்சி மன்ற தலைவருமான கே.ஏ. மனோகரன் தலைமை தாங்கினார்.
ஓசூர்,
ஓசூரை சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியரும், சமீபத்தில், தமிழக அரசின் கபிலர் விருதை பெற்றவருமான கருமலை தமிழாழனுக்கு பாராட்டு விழா மற்றும் அவர்
எழுதிய நூல் வெளி
யீட்டு விழா, ஓசூரில் நடைபெற்றது.
ஓசூர் ெரயில் நிலைய சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2 விழாவிற்கு, ஓசூர் முன்னாள் எம்.எல்ஏ.வும், தமிழ் வளர்ச்சி மன்ற தலைவருமான கே.ஏ. மனோகரன் தலைமை தாங்கினார்.
அறம் இலக்கிய அமைப்பின் செயலாளர் ராசு வரவேற்றார். இதில், கருமலைத்தமிழாழன் எழுதிய "பசி வயிற்றுப் பாச்சோறு" என்ற நூலை , தமிழியக்க பொதுச்செ யலாளரும், பட்டிமன்ற நடுவருமான வாணியம்பாடி அப்துல் காதர் வெளியிட , தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பெற்றுக்கொண்டு, நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தி பேசினார். மேலும் இதில், ஒருங்கிணைப்பாளர் வணங்காமுடி, ஓசூர் பி.எம்.சி.டெக் கல்வி நிறுவ னங்களின் தலைவர் பி.குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்து 9 பவுன் தங்க நகையை திருடி விட்டு சென்று விட்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள குண்டியால்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சின்னகண்ணு (வயது75). இவர் நேற்று வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்து 9 பவுன் தங்க நகையை திருடி விட்டு சென்று விட்டனர்.
இது குறித்து அவர் பர்கூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்த குழந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் குழந்தை உயிரிழந்தது.
- இதனால் மனமுடைந்து காணப்பட்ட வள்ளி யம்மாள் நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாறையூர் பகுதியை சேர்ந்தவர் பூவரசன். இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது29). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகியுள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் குழந்தை உயிரிழந்தது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட வள்ளி யம்மாள் நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






