என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகரசம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் சிக்கினர்
- போலீசார் வருவதை அறிந்த அவர்கள் உடனே சீட்டு கட்டுகளை போட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
- போலீசார் விரட்டி சென்று 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள வேலம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டவர்களை பார்த்தனர். போலீசார் வருவதை அறிந்த அவர்கள் உடனே சீட்டு கட்டுகளை போட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
போலீசார் விரட்டி சென்று 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மாதப்பன் மகன் தீபக் (வயது23), கவரன் மகன் சரவணன் (28), சரவணன் மகன் விஷ்ணு (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்து அவர்களிடம் இருந்து பணம், சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story






