என் மலர்
கிருஷ்ணகிரி
- கூட்டமைப்பின் இணை இயக்குநர் (பொது) உன்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
- கருத்தரங்கில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்ட மைப்பின் சார்பில், ஓசூரை ஏற்றுமதி மையமாக மேம்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டுத் திட்ட கருத்தரங்கம், ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
ஏற்றுமதியில் பெருகி வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது தொடர்பாக ஏற்றுமதியா ளர்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்தவும், மாவட்டத்தை ஏற்றுமதி மையமாக மேம்படுத்தவும், சர்வதேச சந்தையில் கிடைக்கும் பல்வேறு வர்த்தக வாய்ப்புகள், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது மற்றும் கீழ் கிடைக்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் பலன்கள், ஏற்றுமதிகளை நிர்வகிக்கும் நடைமுறைகள் போன்றவற்றைப் பற்றி தொழில்முனைவோர் புரிந்து கொள்ளவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த கருத்தரங்கிற்கு, இந்திய ஏற்றுமதி நிறுவ னங்களின் கூட்டமைப்பின் இணை இயக்குநர் (பொது) உன்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் ராமமூர்த்தி, கலால் துறையின் ஜி.எஸ்டி.பிரிவு அதிகாரி பூபதி, எச்.டி.எப்.சி. வங்கி அதிகாரி அனுராக்,பாக்கியவேலு, ஓசூர் ஹோஸ்டியா தலைவர் வேல்முருகன், கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பேசினார்கள்.
இந்த கருத்தரங்கில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
- ரூ.28 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயை லீஷா வாங்கியுள்ளார்.
- மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்அருகே உள்ள குட்டூரை சேர்ந்தவர் மணிக்குமார் (எ) முரு கேசன் (வயது 35). இவது மனைவி லீஷா (28). நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (36). இவர் கோவையில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். லீஷாவுக்கும் பிரகாசுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோவையில் பிரகாஷ் நடத்தி வந்த பியூட்டிபார்லரில் லீஷா வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் தான் தனியாக பியூட்டிபார்லர் வைக்கவேண்டும் என்று கூறி பிரகாஷிடம் இருந்து ரூ.28 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயை லீஷா வாங்கியுள்ளார். ஆனால் அவர் பியூட்டி பார்லர் வைக்கவில்லை. மேலும் தனது கணவருடன் கோவையில் இருந்து அவர் தலைமறைவு ஆகிவிட்டார். கணவன்-மனைவி இருவரையும் பிரகாஷ் பல்வேறு இடங்களில் தேடி வந்தார்.
இந்நிலையில் லீஷாவும் அவரது கணவரும் குட்டூர் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மத்தூர் போலீசில் பிரகாஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில் லீஷா மீதும் அவரது கணவர் மணிக்குமார் மீதும் மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு, அகில இந்திய அளவில் முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகானந்தம், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டப் பொருளாளர் ரமேஷ்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதிமூலம் வரவேற்றார். துணைத் தலைவர் நவீன்குமார் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், பாலிசிதாரர்களுக்காக, பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். வெளிநாட்டு பாலிசிதாரருக்கு ஏதுவாக சேவை அளிக்கப்பட வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
- தடகள விளையாட்டு போட்டிகள் கெலமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
- வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயகோட்டை சரக அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் கெலமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் 18- க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 280 -க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் காமராஜர் விருது பெற்ற கெலமங்கலம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மோனிஷா என்ற மாணவி தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களுடன் தனிநபர் சாம்பியன் பட்டத்தையும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டத்தை தேஜாஸ்ரீ என்ற மாணவி வென்றதுடன் பல்வேறு போட்டிகளில் 80-க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இதற்காக 22-ம் தேதி பள்ளியில் நடந்த பாராட்டு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர்கள் திம்மப்பா, அனைவரையும் வரவேற்று பேசினார். பட்டதாரி ஆசிரியர்கள் லட்சுமி நாராயா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆஷா பீ, உள்ளாட்சி பிரதிநிதி உமா சுரேஷ் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தின ராக கெலமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் தேவராஜ் மற்றும் தொழிலதிபர் ராம் தேவ் என்கிற குமன்ராம் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.
இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.
- கல்லூரியின் முதல்வர் .தனபால் தலைமை தாங்கினார்.
- 3-ம் ஆண்டு மாணவன் குணசேகரன் தொகுப்புரை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நூலக வாசகர் வட்டம் சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது .
விழாவில் கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் துறை தலைவி கிருத்திகா வரவேற்புரையாற்றினார் . கல்லூரியின் முதல்வர் .தனபால் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.பட்டிமன்றத்திற்கு திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சுரேஷ் நடுவராக பங்கேற்றார்.
மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவ தற்கான பேச்சு அணியில் தனசீலன் , லாவண்யா, தேஜா,சுஷ்மிதா ஆகியோர் பேசினர்.
அறிஞர் அண்ணாவின் எழுத்து அணியில் கல்லூரி யின் தமிழ்த்துறைத் தலை வர் சுரேஷ்குமார் , அன்பழ கன் , ஸ்வேதா ஜெயந்தி ஆகியோர் பேசினர்.
பட்டிமன்ற இறுதியில் நடுவர் சுரேஷ் பேரறிஞர் அண்ணா சாமானிய மக்களுக்கு மட்டுமல்லாமல் படித்த மக்களுக்கும் தன்னுடைய எழுத்துக்களால் முத்திரை பதித்தார். அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கொள்கைகளை அனைத்து மாணவ, மாணவிகளும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
பட்டிமன்ற நிகழ்விற்கு முன்னதாக தமிழ்த்துறை 3-ம் ஆண்டு மாணவன் குணசேகரன் தொகுப்புரை வழங்கினார். கல்லூரியின் கணினி அறிவியல் துறைத்தலைவி ராஜலட்சுமி நன்றி கூறினார்.
- தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிந்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகேயுள்ள ரெட்டிபட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சரோஜா (வயது 60).இருவரும் கூலி தொழிலாளிகள். சம்பவத்தன்று சரோஜா வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது யாரோ மர்ம நபர் வீட்டில் புகுந்து ஒன்னேகால் தங்கநகை மற்றும் ரூ.9,000 பணம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.
இது குறித்து சரோஜா ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.
- வருகிற 26-ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
- அறிவியல் பிரிவிற்கு ரூ.1810், கணினி அறிவியல் பிரிவிற்கு ரூ.2010் செலுத்த வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: -
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி யில் 2022-23் ஆண்டுக்கான முதுநிலை பாடப்பிரிவுகளான எம்ஏ., (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல்), எம்.எஸ்சி., (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 26-ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
சிறப்பு பிரிவினர் (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணவ வீரரின் வாரிசுகள், விளையாட்டு, என்சிசி) மாணவர்களுக்கான கலந்தாய்வு 26-ம் தேதி காலை 10.30 மணிக்கும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அன்று காலை 11 மணிக்கும் நடைபெறும்.
மாணவர் சேர்க்கையின் போது, மாற்றுச் சான்றிதழ் (அசல்), மதிப்பெண் பட்டியல் (10, 11, 12 மற்றும் பட்டப்படிப்பு) அசல் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் (அசல்), சிறப்புப் பிரிவினருக்ககன சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 04, ஆதார் அட்டை (நகல்), வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகியவற்றை மூன்று நகல்களாக கொண்டு வரவேண்டும்.
மேலும், சேர்க்கை கட்டணமாக கலைப்பிரி விற்கு ரூ.1750, அறிவியல் பிரிவிற்கு ரூ.1810், கணினி அறிவியல் பிரிவிற்கு ரூ.2010் செலுத்த வேண்டும்.
இவ்வாறு செய்திக்
குறிப்பில் கல்லூரி முதல்வர் அனுராதா தெரி வித்துள்ளார்.
- 500-க்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.
- விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கெலவரிப்பள்ளி அணையில் இருந்து வெளியாகும் தண்ணீர் கால்வாய் வழியாக ஆழியாளம் தடுப்பணைக்கு வந்து நிரம்பிய பின்பு கீரணப் பள்ளி, தேவஸ்தானப்பள்ளி, அயர்னப் பள்ளி, ராமாபுரம் , வழியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு செல்கிறது. தென்பென்னை ஆற்றங்கரையோரம் 500-க்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.
கடந்த ஆட்சியில் ஆழியாளம் தடுப்பணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக தருமபுரி துள்செட்டி ஏரிக்கு தண்ணீர் எடுத்து செல்ல திட்டம் அறிவித்தனர். அதன் மூலம் தேவஸ்தானப் பள்ளிக்கு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இப்பகுதி விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தனப்பள்ளி போலீசார் மற்றும் ஒசூர் சப் -கலெக்டர் தேன்மொழி, சூளகிரி தாசில்தார் அனிதா மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
- பேரிகை பாரதிநகரில் ராஜப்பா வீடு முதல் ரமேஷ் வீடு வரை ரூ.5,85,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை ஆகிய பணிகளுக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பேரிகை ஊராட்சியில் ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் பேரிகை பஸ் நிலையம் பின்புரம் அப்பையா வீடு வரை ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, பேரிகை- சூளகிரி செல்லும் சாலையில் காதர்பேக் வீடு முதல் ராதம்மா வீடு வரை ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய், பேரிகை பாரதிநகரில் ராஜப்பா வீடு முதல் ரமேஷ் வீடு வரை ரூ.5,85,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை ஆகிய பணிகளுக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வட்டார வளர்சி அலுவலர் கோபாலகிருஷ்னண், ஒன்றி்ய குழு உறுப்பினர்கள் நாகேஷ், மஞ்சுளா ரவி, பொறியாளர் சியாமளா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முரளி, நாகேஷ், ஊராட்சி கழக செயலாளர் வினோத், ஊர் கவுண்டர், ஒப்பந்ததாரர், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- பள்ளியில் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்வதாக வாட்ஸ் அப் குழுக்களில் வீடியோ நேற்று வெளியானது.
- மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பள்ளியில் தமிழ் பாட முதுகலை ஆசிரியர் அனுமுத்துராஜ் என்பவர், தலைமை ஆசிரியர் மீது பொய்யான புகார் அளிக்கும் வகையில் இதை போன்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்வதாக வாட்ஸ் அப் குழுக்களில் வீடியோ நேற்று வெளியானது.
இதைத் தொடர்ந்து அந்த பள்ளியில் நேரடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலைக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி உத்தரவிட்டார்.
இதையடுத்து அங்கு மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பள்ளியில் தமிழ் பாட முதுகலை ஆசிரியர் அனுமுத்துராஜ் என்பவர், தலைமை ஆசிரியர் மீது பொய்யான புகார் அளிக்கும் வகையில் இதை போன்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்க கூடிய 2 மாணவர்களை அழைத்து கழிவறையை சுத்தம் செய்வதை போல தனது செல்போனில் ஆசிரியர் அனுமுத்துராஜ் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை வாட்ஸ் அப் குழுக்களில் வெளியிட்டது விசாரணை யில் தெரிய வந்தது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் காந்திமதி என்பவருக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த செயலில் தமிழ் ஆசிரியர் அனுமுத்துராஜ் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை கொடுத்த நேரடி விசாரணையின் அடிப்படையில் மல்லப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் பாட முதுகலை ஆசிரியர் அனுமுத்துராஜை தற்காலிக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழ் ஆசிரியர் அனுமுத்துராஜ், தவறான செயலில் ஈடுபட்டு பள்ளிக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தியதற்காக கலெக்டர் உத்தரவின் பேரில், ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தனர்.
- இருவருக்கும் தனிதனியாக நிலத்தை பிரித்து கொடுத்துள்ளார்.
- பெரியசாமியை விவசாய பணிகளை செய்ய விடாமல் தடுத்து, தாக்கியதாக கூறப்படுகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள குள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது45). பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவரது சகோதரர் மதன் (60).
இவர்களது தந்ைத இவர்கள் இருவருக்கும் தனிதனியாக நிலத்தை பிரித்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 14-ந்ேததி பெரியசாமி தனது விவசாய நிலத்திற்கு சென்று விவசாய பணிகளை மேற்கொண்டிருந்த போது, அங்கு வந்த மதன், மதனின் மருமகன்களான சின்னசாமி, சுரேஷ், மற்றும் உறவினர் சின்னதுரை ஆகிய நான்கு பேரும் பெரியசாமியை விவசாய பணிகளை செய்ய விடாமல் தடுத்து, தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் குருடு என ஊனத்தை ஏளனம் செய்து பேசியதால், மனமுடைந்த பெரியசாமி மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் பெரியசாமியின் சகோதரர் மதன் மீது மட்டும் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ், சின்னசாமி, சின்னதுரை ஆகிய மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி பெரியசாமிக்கு ஆதரவாக நேற்று மாலை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒன்று திரண்டு புகார் அளித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்- இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் சம்பந்தபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
- குழந்தைகள் காலை முதல் மாலை வரை தங்கி கல்வி கற்றும் உணவு சாப்பிட்டும் வருகின்றனர்.
- கிரானைட் கழிவுகளை எடுத்து வந்து கொட்டுவதால் காற்றில் பரக்கும் துகளால் மூச்சு திணறல் நோய் பரவும் அபாயம் உள்ளதாக குழந்தைகளின் பெற்றோர் புகார் கூறி வருகின்றனர்.
சூளகிரி.
சூளகிரி தாலுகா காமன்தொட்டி ஊராட்சியை சேர்ந்தது குருமசப்படி கிராமம். இந்த கிராமத்தில் அரசு அங்கன்வாடி பள்ளி உள்ளது.
இந்தப்பள்ளிக்கு குருமசப்படி, சப்படி, பெரியசப்படி, கோட்டப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து இருந்து 2 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் காலை முதல் மாலை வரை தங்கி கல்வி கற்றும் உணவு சாப்பிட்டும் வருகின்றனர்.
இந்த பள்ளியில் ஒரு ஆசிரியர் மற்றும் உதவியாளர் உள்ளனர். மேலும் இங்குள்ள அங்கன்வாடிக்கு கருவுற்ற பெண்கள் சத்து பவுடர் வாங்கியும் சென்று வருகின்றனர்.
இந்த பள்ளி அருகே உள்ள நிலத்தில் கிரானைட் கழிவுகளை எடுத்து வந்து கொட்டுவதால் காற்றில் பரக்கும் துகளால் மூச்சு திணறல் நோய் பரவும் அபாயம் உள்ளதாக குழந்தைகளின் பெற்றோர் புகார் கூறி வருகின்றனர்.
உடனே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.






