என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதுகலைப் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு"

    • வருகிற 26-ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
    • அறிவியல் பிரிவிற்கு ரூ.1810், கணினி அறிவியல் பிரிவிற்கு ரூ.2010் செலுத்த வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: -

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி யில் 2022-23் ஆண்டுக்கான முதுநிலை பாடப்பிரிவுகளான எம்ஏ., (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல்), எம்.எஸ்சி., (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 26-ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

    சிறப்பு பிரிவினர் (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணவ வீரரின் வாரிசுகள், விளையாட்டு, என்சிசி) மாணவர்களுக்கான கலந்தாய்வு 26-ம் தேதி காலை 10.30 மணிக்கும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அன்று காலை 11 மணிக்கும் நடைபெறும்.

    மாணவர் சேர்க்கையின் போது, மாற்றுச் சான்றிதழ் (அசல்), மதிப்பெண் பட்டியல் (10, 11, 12 மற்றும் பட்டப்படிப்பு) அசல் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் (அசல்), சிறப்புப் பிரிவினருக்ககன சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 04, ஆதார் அட்டை (நகல்), வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகியவற்றை மூன்று நகல்களாக கொண்டு வரவேண்டும்.

    மேலும், சேர்க்கை கட்டணமாக கலைப்பிரி விற்கு ரூ.1750, அறிவியல் பிரிவிற்கு ரூ.1810், கணினி அறிவியல் பிரிவிற்கு ரூ.2010் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு செய்திக்

    குறிப்பில் கல்லூரி முதல்வர் அனுராதா தெரி வித்துள்ளார். 

    ×