என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரிகை  ஊராட்சியில்               ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சாலை  அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
    X

    சாலை அமைக்கும் பணிக்கு தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.

    பேரிகை ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

    • ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
    • பேரிகை பாரதிநகரில் ராஜப்பா வீடு முதல் ரமேஷ் வீடு வரை ரூ.5,85,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை ஆகிய பணிகளுக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பேரிகை ஊராட்சியில் ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் பேரிகை பஸ் நிலையம் பின்புரம் அப்பையா வீடு வரை ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, பேரிகை- சூளகிரி செல்லும் சாலையில் காதர்பேக் வீடு முதல் ராதம்மா வீடு வரை ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய், பேரிகை பாரதிநகரில் ராஜப்பா வீடு முதல் ரமேஷ் வீடு வரை ரூ.5,85,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை ஆகிய பணிகளுக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்வில் வட்டார வளர்சி அலுவலர் கோபாலகிருஷ்னண், ஒன்றி்ய குழு உறுப்பினர்கள் நாகேஷ், மஞ்சுளா ரவி, பொறியாளர் சியாமளா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முரளி, நாகேஷ், ஊராட்சி கழக செயலாளர் வினோத், ஊர் கவுண்டர், ஒப்பந்ததாரர், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×