என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவம்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்ற மருத்துவ பேரவை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டார மருத்துவர் ரங்கசாமி தலைமையில் சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன் குத்துவிளக்கேற்றி வைத்த காட்சி.
சிவம்பட்டி சமுதாய கூடத்தில் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்
- வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள்எவ்வித சிரமம்மின்றி சிகிச்சை பெற ஏதுவாக இருக்கும் என பேசினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வட்டார சுகாதார பேரவையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி பேசியது, மத்தூர் ஒன்றியத்தில் உள்ள மத்தூர், சிவம்பட்டி, கொட மாண்டப்பட்டி, சாமல்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் எவ்வித வசதி வசதியின்றியும் தனியார் கட்டிடங்களில் இயங்குவதால் அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடங்களை கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நோயாளிகள் மற்றும் கர்பினிகள் எவ்வித சிரமம்மின்றி சிகிச்சை பெற ஏதுவாக இருக்கும் என பேசினார்.
அதே போல் மத்தூர் அரசு மருத்துவமனையில் அதிகளவில் உள்நோயா ளிகளாக நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருவதால் புதியதாக கூடுதல் கட்டிடங்கள் கட்டி அதிக படுக்கை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் அகிலா இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் கோரிக்கை வைத்து பேசினார். இதில் மக்களுக்கு தேவையான மருத்துவம் சார்ந்த நிறை குறை பேசப்பட்டது.
நிகழ்ச்சியில் மத்தூர் ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி (வ.ஊ), முருகன், (கி.ஊ) மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கர், மத்தூர் தொடக்க கல்வி அலுவலர் நாசர், சிவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் மனோகரன், அந்தேரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரவர்த்தி, கொடமாண் டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி சுந்தரவடிவேல், சாமல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேனி வெங்கடேசன், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா ராமன், ஒட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ், ஆனந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பவித்ரா சிலம்பரசன், கவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் பூபதி உள்ளிட்ட மத்தூர் ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சி மன்ற தலைவர்கள் மருத்துவம் சார்ந்த பேரவை விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.






