என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி, ஓசூர் சேர்ந்த வாலிபர் உள்பட 2 பேரிடம் 6 லட்சம் பணம் மோசடி
- ஆன்லைன் மூலம் ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார்.
- சந்தேகம் அடைந்த சிவசங்கர் கிருஷ்ணகிரி சைபர் போலீசில் புகார் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி செந்தில்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது43). இவர் பத்திர பதிவு எழுத்தர் அலுவலகம் நடத்தி வருகிறார். கடந்த 10-ந்தேதி அன்று அவருக்கு செல்போன் மூலம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் பேப்பர் குறைந்த விலைக்கு தருவதாக கூறினர். இதனை நம்பிய ஆன்லைன் மூலம் ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் பேப்பர் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிவசங்கர் கிருஷ்ணகிரி சைபர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதே போல் ஓசூர் பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (24). இவருக்கு வெளிநாட்டில் ேவலை வாங்கி தருவதாக போன் வந்தது. அதனால் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். பின்னர் ஏமாற்றம் அடைந்த அவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி விசாரணை நடத்தி வருகிறார்.






