என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பனபள்ளி அருகே   செங்கல்லால் தொழிலாளியை தாக்கிய டிரைவர் கைது
    X

    வேப்பனபள்ளி அருகே செங்கல்லால் தொழிலாளியை தாக்கிய டிரைவர் கைது

    • குடும்ப விவகாரம் தொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • ஆத்திரம் அடைந்த முபாரக் அருகே கிடந்த செங்கல்லை எடுத்து ரியாஸ் பாஷாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன பள்ளி மஜீத் தெருவை சேர்ந்தவர் ரியாஸ் பாஷா (வயது 48).கூலி தொழிலாளி. இவரது உறவினர் முபாரக் (30). டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது குடும்ப விவகாரம் தொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த முபாரக் அருகே கிடந்த செங்கல்லை எடுத்து ரியாஸ் பாஷாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த ரியாஸ் பாஷா வேப்பன பள்ளி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    தாக்குதல் குறித்து வேப்பன பள்ளி போலீசில் ரியாஸ் பாஷா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து டிரைவர் முபாரக்கை கைது செய்தனர்.

    Next Story
    ×