என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே   போதையில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது
    X

    ஓசூர் அருகே போதையில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது

    • நேற்றும் இதேபோல வேல்முருகன் போதையில் வந்துள்ளார்.
    • அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் அருகே கிடந்த கத்தியை எடுத்து விக்னேஷின் வயிற்றில் குத்திவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் அருகேயுள்ள வி.ஓ.சி. நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 53). இவரது மகன் விக்னேஷ் (29).

    குடிப்பழக்கத்துக்கு அடிமையான வேல்முருகன் தினசரி போதையில் வந்து வீட்டில் ரகளை செய்வாராம்.

    நேற்றும் இதேபோல வேல்முருகன் போதையில் வந்துள்ளார். அப்போது தினமும் இவ்வாறு போதையில் வந்து வீட்டில் தகராறு செய்வது குறித்து அவரது மகன் விக்னேஷ் கண்டித்துள்ளார்.

    அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் அருகே கிடந்த கத்தியை எடுத்து விக்னேஷின் வயிற்றில் குத்திவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்து ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ள விக்னேஷ் தந்த புகாரின் பேரில் ஓசூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.

    Next Story
    ×