என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே தமிழர்கள் கலை நிகழ்ச்சி நடத்த கன்னட அமைப்பினர் எதிர்ப்பு- போலீசில் புகார் கொடுத்தனர்
    X

    ஓசூர் அருகே தமிழர்கள் கலை நிகழ்ச்சி நடத்த கன்னட அமைப்பினர் எதிர்ப்பு- போலீசில் புகார் கொடுத்தனர்

    • கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஹெப்பகோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • வணக்கம் பெங்களூரு என்ற பெயரில் இங்கு டிக்கெட் விற்று, கலை நிகழ்ச்சிகள் நடத்தி பணம் சம்பாதிப்பது ஏற்க முடியாது.

    ஓசூர்:

    ஓசூர் அருகே கர்நாடக மாநில பகுதியான ஹெப்பகோடியில், ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் இன்று (ஞாயிற்றுகிழமை) மாலை, "வணக்கம் பெங்களூரு" என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

    இதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஹெப்பகோடி காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்தனர்.

    மேலும் இது குறித்து ஒரு பெண் நிர்வாகி, கர்நாடக மாநிலத்திற்கு தமிழர்கள் வருகின்றனர். சம்பாதித்து செட்டில் ஆகின்றனர். ஆனால் திரும்பி செல்லும் போது கர்நாடகத்தை திட்டி செல்கின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் இது போன்று நாங்கள் கன்னட நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிப்பார்களா? இவ்வாறு வேற்றுமை உணர்வுடன் செயல்படும் அவர்கள் , "வணக்கம் பெங்களூரு" என்ற பெயரில் இங்கு டிக்கெட் விற்று, கலை நிகழ்ச்சிகள் நடத்தி பணம் சம்பாதிப்பது ஏற்க முடியாது.

    எனவே இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையெனில், அனைத்து கன்னட அமைப்புகளையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்து, போலீசில் மனு அளிக்க வந்துள்ளதாக ஆவேசமாக கூறினார்.

    Next Story
    ×