என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணகிரி சின்ன ஏரியை சுத்தப்படுத்தும் பணி"

    • கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் இப்பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
    • இந்த பணியினை நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், 17 ஏக்கர் பரப்பளவில் சின்ன ஏரி அமைந்துள்ளது. ஏரியை சுற்றிலும் குப்பை கூளங்கள் சேர்ந்திருந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் இப்பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பணியினை நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் (பொ) சவரணன் முன்னிலை வகித்தார்.

    இதையடுத்து, சின்ன ஏரியை சுற்றியுள்ள, 1.5 கி.மீ., தூரத்தை இந்தியன் சுவஜ்ஜதா லீக் மூலம் இணையத்தில் பதிவு செய்த, 120 தன்னார்வலர்கள் சுத்தம் செய்தனர். அவர்களுக்கு 'கிருஷ்ணகிரி கிங்' என எழுதப்பட்ட 'டீசர்ட்' மற்றும் தொப்பி வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகராட்சி துப்புரவு அலுவலர் மோகனசுந்தரம், துப்புரவு ஆய்வாளர்கள் உதயகுமார், சந்திரகுமார் மற்றும் தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×