என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டலில் அனுமதியின்றி விற்பனை:  68 மதுபாட்டில்களுடன் சிக்கிய பர்கூர் வாலிபர்
    X

    ஓட்டலில் அனுமதியின்றி விற்பனை: 68 மதுபாட்டில்களுடன் சிக்கிய பர்கூர் வாலிபர்

    • ஓட்டலில் திருட்டுத்தனமாக ராமச்சந்திரன் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது
    • போலீசார் அந்த ஓட்டலில் திடீர் சோதனை நடத்தினர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள பிள்ள கொட்டாய் பகுதியில் பர்கூர் அத்திமங்கலத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 32) என்ற வாலிபர் சாலையோர ஓட்டல் நடத்தி வருகிறார்.

    அந்த ஓட்டலில் திருட்டுத்தனமாக ராமச்சந்திரன் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது ராமச்சந்திரன் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 68 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×