என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் அமைப்புசாரா உடல் உழைப்பு சங்கத்தின் 23-ம் ஆண்டு தொடக்க விழா
    X

    ஓசூரில் அமைப்புசாரா உடல் உழைப்பு சங்கத்தின் 23-ம் ஆண்டு தொடக்க விழா

    • மாநில சங்கத்தின் 23-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
    • மாநில நிர்வாகிகளும், தொழிலாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    ஓசூரில், தமிழ்நாடு அமைப்புசாரா உடல் உழைப்பு மாநில சங்கத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் மாநில சங்கத்தின் 23-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

    ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, மாநில தலைவர் வக்கீல் எம்.பி. இளஞ்சூரியன் தலைமை தாங்கி, பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

    இதில், மாநில நிர்வாகிகளும், தொழிலாளர்களும் திரளாக கலந்து கொண்டனர். .

    மேலும், ஆன்லைன் மூல பெறப்பட்ட ஆணையை, இளஞ்சூரியன் தொழிலாளர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விசைத்தறி பிரிவு மாவட்ட செயலாளர் குணசேகரன். வக்கீல் மனோகர். அலுவலக நிர்வாகி சத்தியா.

    வக்கீல் வனதாட்சி, மற்றும் வினோதினி. ரக்ஷித், பாஸ்கர். வெங்கட்ரமணப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×