search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் மூக்கண்டபள்ளியில்  ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டிருந்த ராஜ கால்வாய் சீரமைப்பு
    X

    ஓசூர் மூக்கண்டபள்ளியில் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டிருந்த ராஜ கால்வாய் சீரமைப்பு

    • மழை நீர் செல்ல முடியாமல் தேங்கி நின்று, சுமார் 5,000 குடியிருப்புகளில் உள்ள மக்கள் கடும் அவதியை சந்தித்து வந்தனர்.
    • ராஜ கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள், செடி, கொடிகள் அனைத்தும் ஜே.சி.பி. மற்றும் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு சுமார் 3 கி.மீ. தூரம் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஓசூர்,

    ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளி தேசிங்கு நகர், ராஜாஜி நகர், எம். எம். நகர், ஸ்ரீ நகர் ஆகிய பகுதிகள் வழியாக பழமையான ராஜ கால்வாய் செல்கிறது.

    இந்த ராஜ கால்வாய், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சுத்தம் செய்யப்படாமல் ஆக்கி ரமிப்புகளால் சூழப்பட்டு இருந்தது. இதனால் மழைக்காலங்களில் கால்வாய் வழியாக மழை நீர் செல்ல முடியாமல் தேங்கி நின்று, சுமார் 5,000 குடியிருப்புகளில் உள்ள மக்கள் கடும் அவதியை சந்தித்து வந்தனர்.

    இதனைத்தொடர்ந்து ஓசூர் மாநகராட்சி மூலம் ரூ.10 லட்சம் செலவில், 17-வது வார்டு கவுன்சிலர் நாகராஜ் முயற்சியின்பேரில் ராஜா கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கியது.

    ராஜ கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள், செடி, கொடிகள் அனைத்தும் ஜே.சி.பி. மற்றும் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு சுமார் 3 கி.மீ. தூரம் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கால்வாய் சுத்தம் செய்யப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ராஜ கால்வாய் சுத்தம் செய்யப்படுவதால் மழைக்காலங்களில் அதிகப்படியாக வரும் மழை நீர் எங்கும் தேங்காமல், கால்வாய் வழியாக அப்பகுதியில் உள்ள சந்திராம்பிகை ஏரிக்கு எளிதில் சென்று விடும்.

    இதற்கான நடவடிக்கை களை மேற்கொண்ட ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் கவுன்சிலர் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×