என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மின் கம்பி அருகே பேர குழந்தை சென்றதை கண்டு பதறி போய் குழந்தையை காப்பாற்ற ஓடினார்.
    • கால் இடறி அறுந்து கிடந்த மின் கம்பி மீது தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேய ஈஸ்வரி பலியானார்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கொள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி. நேற்று அருகில் உள்ள விவசாய நிலத்தில் ஈஸ்வரி தனது பேரக்குழந்தையுடன் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அருந்து கிடந்த மின் கம்பி அருகே பேர குழந்தை சென்றதை கண்டு பதறி போய் குழந்தையை காப்பாற்ற ஓடினார்.

    அப்போது கால் இடறி அறுந்து கிடந்த மின் கம்பி மீது தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேய ஈஸ்வரி பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருப்பதி மதுபோதையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தார்.
    • தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி கிணற்றில் இருந்து திருப்பதியை மீட்டனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கோடிபதி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது32). இவரது மனைவி அனிதா (28). போச்சம்பள்ளியில் தபால்காரராக திருப்பதி வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று திருப்பதி மதுபோதையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தார்.

    இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி மத்தூர் போலீசாருக்கும், போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர்.

    தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி கிணற்றில் இருந்து திருப்பதியை மீட்டனர். பின்னர் அவரது உடலை போலீசார் மத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டோல்கேட் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் டோல்கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர் 10 கிலோ கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது. ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த மல்லனூர் பகுதியை சேர்ந்த மாரியப்பா மனைவி ஜெயலட்சுமி (வயது40) என்பது தெரியவந்தது. இது ெதாடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயலட்சுமியை கைது செய்தனர்.

    இதே போல் பர்கூர் அடுத்த ஜெகதேவி ஞானம்மாள் காலனியை சேர்ந்த யூசுப்கான் என்பவர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டது.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து தலைமையில் போலீசார் கோவிலூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • பணம் வைத்து சூதாடியதாக 6 பேர் கைது செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து தலைமையில் போலீசார் கோவிலூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது பணம் வைத்து சூதாடியதாக காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த ஹஸ்லாம் (வயது43), கோவிலூரை சேர்ந்த ரவி, முருகன், செட்டிமாரன்பட்டியை சேர்ந்த தேவராஜ், தளிஅள்ளிைய சேர்ந்த யுவராஜ், விஜயன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • நாச்சிகுப்பம் வரை சென்று வருவதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் படி வேப்பனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    வேப்பனஹள்ளி அருகில் உள்ள பகுதியை சேர்ந்தவர்,16 வயது பிளஸ் 1 மாணவன். இவர் காலை, 9 மணியளவில் அவரது தந்தையின் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் தன் நண்பன் வீட்டிற்கு நாச்சிகுப்பம் வரை சென்று வருவதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

    மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் படி வேப்பனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் தலைமையில் போடப்பட்டது.
    • அனைவருக்கும் பொரி, கல்லை, வெள்ளம் இனிப்பு ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் அரசம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் தலைமையில் போடப்பட்டது.

    இந்த விழாவில் அலுவலக கையேடுகள் மற்றும் வாகனங்களுக்கு பூஜை செய்து கலந்துக்கொண்ட அனைவருக்கும் பொரி, கல்லை, வெள்ளம் இனிப்பு ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் துணை தலைவர் குமார், ஊராட்சி செயளாலர் தமிழரசன், கவுன்சிலர்கள் சின்னப்பா கண்ணன், மாதன், வினாயகா பால்டெக்னிக் தாளாளர் ரங்கநாதன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் மாது செய்திருந்தார்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி கோட்டப்பதி பகுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பொதுமக்கள் தெருவிளக்கு, குடிநீர், சிமெண்ட் சாலை, ஆழ்துழை கிணறு, இலவச வீட்டுமனை பட்டா, சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனுக்கள் வழங்கினர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட தணிக்கை மற்றும் தொகுதி ஆய்வாளர் சுசீலாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குறள்வாணி, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கனகராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கல்வித்துறை, சுகாதாரத் துறை, வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை, அங்கன் வாடி பணியாளர்கள், சுய உதவிக் குழு பெண்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் மாது செய்திருந்தார்.

    • 4 அடி உயரம் 2½ அகலம் உள்ள வள்ளலாரின் உருவப்படம் அனைத்தும் சிறு சிறு பேப்பர் துண்டு களால் ஆனது.
    • மொசைக் ஆர்ட் என்ற கலை வடி வத்தில் லூகாஸ் வள்ளலார் படத்தை உருவாக்கி உள்ளார்.

    ஓசூர்,

    வள்ளலாரின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் லூகாஸ் என்பவர் 5,000 சிறு சிறு பேப்பர் துண்டுகளை கொண்டு மொசைக் ஆர்ட்டில் வள்ளலாரின் உருவப்படத்தை வடிவ மைத்துள்ளார். திருவருட்பிரகாச வள்ள லார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார்,

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் 1823 ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி பிறந்தார். இவர் ஒரு ஆன்மீகவாதி, சத்திய ஞான சபையை நிறுவியவர், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என பாடியவர், வள்ளலாரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5- ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் வள்ளலாரின் 200-வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையிலும், அவ ருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், ஓசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியில் வசித்து வரும் லூகாஸ் (33) என்ற தனியார் நிறுவன ஊழியர் 5,000 சிறு சிறு பேப்பர் துண்டுகளை கொண்டு மொசைக் ஆர்ட்டில் வள்ளலாரின் உருவப்படத்தை வடிவ மைத்துள்ளார். கடந்த ஒரு மாத காலமாக கடின உழைப்பால் இந்த உருவப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

    4 அடி உயரம் 2½ அகலம் உள்ள வள்ளலாரின் உருவப்படம் அனைத்தும் சிறு சிறு பேப்பர் துண்டு களால் ஆனது. மொசைக் ஆர்ட் என்ற கலை வடி வத்தில் லூகாஸ் வள்ளலார் படத்தை உருவாக்கி உள்ளார். நிறுவனத்தின் பணிகள் முடிந்த பின்னர் தனக்கு நேரம் கிடைக்கும்போது இந்த படத்தை உருவாக்கியதாக அவர் கூறினார்.

    • தலைமறைவான சத்திய மூர்த்தி மற்றும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.
    • போலீசார் யுவராஜ் வடிவேல் உள்ளிட்டோர் 2 கிலோ மீட்டர் விரட்டிச் சென்று சத்தியமூர்த்தியை பிடித்து கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 34). இவர் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவுக்கு கடத்தி வந்தார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் ரேஷன் அரிசி கடத்தியதாக சின்னகோட்டப்பள்ளி, கிருஷ்ணகிரி ஆவின் பாலம், காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இவரது 5 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

    தலைமறைவான சத்திய மூர்த்தி மற்றும் சிலரை போலீசார் தேடி வந்தனர். மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய ஐந்து வாகனங்களையும், 21 ஆயிரத்து 300 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் சத்தியமூர்த்தி, நேற்று கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் சென்றனர். போலீசாரை கண்டவுடன் வீட்டின் பக்கவாட்டில் குதித்து சத்தியமூர்த்தி தப்பித்தார். அவரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், மூர்த்தி மற்றும் போலீசார் யுவராஜ் வடிவேல் உள்ளிட்டோர் 2 கிலோ மீட்டர் விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர்.

    மேலும் அரிசி கடத்தல் விவகாரத்தில் அவருடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்த போலீசார், சத்தியமூர்த்தியை கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமையில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
    • பூஜைகளுக்கு பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமையில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. விழாவிற்கு துணை மேயர் ஆனந்தய்யா ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூஜைகளுக்கு பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    மேலும் விழாவில், அசோகா, ஸ்ரீதரன், மாதேஸ்வரன், சென்னீ ரப்பா, நாகராஜ், மோசின் தாஜ் நிஜார் அகமது, இந்திராணி உள்ளிட்ட கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சந்திரகுமார் போன் பே மூலம் மூன்று தவணையாக மர்மகும்பல் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார்.
    • அதன் பின்னர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த சந்திரகுமார் இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பேரிகையை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது33), ஓசூரில் உள்ள ஒரு ஒரு ஜூவல்லரியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆக.29-ந்தேதி அன்று, இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

    அதில் பேசியவர்கள் சென்னை சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம். நீங்கள் ஆபாச படங்களை சமீப நாட்களாக பார்த்து வருவது குறித்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. அதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், 10 ஆயிரம் ரூபாய் உடனடியாக அனுப்ப வேண்டும் என மிரட்டி உள்ளனர்.

    அதை நம்பிய சந்திரகுமார் போன் பே மூலம் மூன்று தவணையாக அவர்களது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பின்னர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த சந்திரகுமார் இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் மர்ம நபர்கள் பேசிய செல்போன் எண்ணின் முகவரி போலி என்பதும், பாலக்கோடு அருகில் சிம்பார்டு விற்கப்பட்டதும் தெரிய வந்தது.

    பணம் எடுத்த வங்கி விவரத்தை போலீசார் விசாரித்த போது பணம் பெற்றவர், சேலம் மாவட்டம், கரடூர் மணிமுத்து என்பதும், அவரும் நண்பர்கள் 3 பேர் இணைந்து பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    யூ டியூப்பில் போலீஸ், வாக்கி டாக்கி சத்தத்தை வைத்து விட்டு அதன் பின்னர் செல்போனில் பேசி பணப்பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து சந்திரகுமாரிடம் மிரட்டி பணம் பறித்த தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சுங்கரஹள்ளி மால்லின் (22), மணிமுத்து (23), கிருஷ்ணகிரி மாவட்டம் சாப்பர்த்தி வேடியப்பன் (28), தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கீழ்வீதி மாரியப்பன் (35), ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன், வங்கி கணக்கு புத்தகம், டெபிட்கார்டுகள் 4 சிம்கார்டுகள் மற்றும் 6 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அண்ணிக்கும், பங்கஜ் பஸ்வானுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
    • மூச்சு திணறி பங்கஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஓசூர்,

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ் பஸ்வான் (வயது25). இவரது உறவினர் சிபிஜி குமார்(22).

    இந்த நிலையில் சிபிஜி குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு சென்று இருந்தார். அப்போது, அங்கு அவரது அண்ணிக்கும், பங்கஜ் பஸ்வானுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர், பங்கஜிடம் ஒசூரில் வேலை வாங்கித் தருவதாக நைசாக பேசி, ஓசூர் அருகே உலியாளம் கிராமத்தில் அழைத்து வந்துள்ளார். அங்கு தனது அறையில் தங்க வைத்து கடந்த சில நாட்களாக கட்டிட வேலையில் அவரை ஈடுபடுத்தினார்.

    இந்த நிலையில் பங்கஜ் பஸ்வானை பழிவாங்கும் நோக்கில், நேற்று நள்ளிரவில் அவரை சிபிஜி குமார் தாக்கி, கழுத்தை இறுக்கினார். இதில் மூச்சு திணறி பங்கஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பின்னர், கட்டிட உரிமையாளர் மூலம் போலீசில் சரணடைந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து பாகலூர் போலீசார் சிபிஜி குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×