என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் பரபரப்பு கள்ளத்தொடர்பு பிரச்சினையில் வட மாநில தொழிலாளி கொலை
- அண்ணிக்கும், பங்கஜ் பஸ்வானுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
- மூச்சு திணறி பங்கஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஓசூர்,
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ் பஸ்வான் (வயது25). இவரது உறவினர் சிபிஜி குமார்(22).
இந்த நிலையில் சிபிஜி குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு சென்று இருந்தார். அப்போது, அங்கு அவரது அண்ணிக்கும், பங்கஜ் பஸ்வானுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், பங்கஜிடம் ஒசூரில் வேலை வாங்கித் தருவதாக நைசாக பேசி, ஓசூர் அருகே உலியாளம் கிராமத்தில் அழைத்து வந்துள்ளார். அங்கு தனது அறையில் தங்க வைத்து கடந்த சில நாட்களாக கட்டிட வேலையில் அவரை ஈடுபடுத்தினார்.
இந்த நிலையில் பங்கஜ் பஸ்வானை பழிவாங்கும் நோக்கில், நேற்று நள்ளிரவில் அவரை சிபிஜி குமார் தாக்கி, கழுத்தை இறுக்கினார். இதில் மூச்சு திணறி பங்கஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், கட்டிட உரிமையாளர் மூலம் போலீசில் சரணடைந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து பாகலூர் போலீசார் சிபிஜி குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






