என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரை அருகே  பேரக்குழந்தையை காப்பாற்ற முயன்ற மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி
    X

    ஊத்தங்கரை அருகே பேரக்குழந்தையை காப்பாற்ற முயன்ற மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி

    • மின் கம்பி அருகே பேர குழந்தை சென்றதை கண்டு பதறி போய் குழந்தையை காப்பாற்ற ஓடினார்.
    • கால் இடறி அறுந்து கிடந்த மின் கம்பி மீது தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேய ஈஸ்வரி பலியானார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கொள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி. நேற்று அருகில் உள்ள விவசாய நிலத்தில் ஈஸ்வரி தனது பேரக்குழந்தையுடன் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அருந்து கிடந்த மின் கம்பி அருகே பேர குழந்தை சென்றதை கண்டு பதறி போய் குழந்தையை காப்பாற்ற ஓடினார்.

    அப்போது கால் இடறி அறுந்து கிடந்த மின் கம்பி மீது தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேய ஈஸ்வரி பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×